மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

துப்பாக்கிச் சுடுதல்: அசத்தும் இந்தியர்கள்!

துப்பாக்கிச் சுடுதல்: அசத்தும் இந்தியர்கள்!

உலகத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

2018ஆம் ஆண்டிற்கான ISSF உலகத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் கொரியாவின் சங்கவானில் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் கலந்துகொண்ட சீனியர் வீரர்கள் சாதிக்கத் தவறிய நிலையில் 16 வயதான சவுரப் சவுத்ரி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியின் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்ட இவர் 245.5 புள்ளிகளுடன் தனது முந்தைய சாதனையை முறியடித்து தங்கம் வென்றுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியப் போட்டித் தொடரிலும் இவர் தங்கம் வென்றிருந்தார்.

இதே பிரிவில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் சிங் 218 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். முன்னதாக சவுத்ரி கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் புதிய உலக சாதனை படைத்திருந்தார். கொரியாவைச் சேர்ந்த ஹோஜின் லிம் 243.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

தனிப்பிரிவில் பதக்க வாய்ப்பை இழந்த மற்றொரு இந்திய வீரர் அன்மோல், சவுரப் சவுத்ரி, அர்ஜுன் சிங் ஆகியோருடன் இணைந்து 1730 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். அணி பிரிவில் 1732 புள்ளிகளுடன் கொரியா தங்கத்தையும், 1711 புள்ளிகளுடன் ரஷியா வெண்கலத்தையும் தட்டிச் சென்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியப் போட்டிகள் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட 9 பதக்கங்களை வென்றிருந்தது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon