மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

பாகுபலி நாயகனுடன் ஜோடி சேர்ந்த பூஜா

பாகுபலி நாயகனுடன் ஜோடி சேர்ந்த பூஜா

பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களைப்பெற்ற பிரபாஸின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. இந்திய அளவில் கவனம் பெற்றதால் பிரம்மாண்ட கூட்டணி அமைப்பது எளிமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாஹோ படத்திற்கான ஆரம்பகட்ட படங்கள் ஆரம்பமாகி நடைபெற்றபோது கதாநாயகி யார் என முடிவு செய்வது படக்குழுவுக்கு சிரமம் இருந்தது. காரணம் பாலிவுட்டை தவிர்த்து பிராந்திய மொழிப்பட நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க பாலிவுட் கதாநாயகிகள் தயக்கம் காட்டியதாக பேச்சு எழுந்தது. அதன்பின் இந்தி, தெலுங்கு, தமிழ் என மும்மொழிகளில் தயாராகும் சாஹோ படத்திற்கு பாலிவுட்டைச் சேர்ந்த ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக ஒப்பந்தமானார்.

பிரபாஸுக்கு உருவாகியுள்ள மார்கெட்டைக் கணக்கில் கொண்டு சாஹோ படத்தைத் தொடர்ந்து உருவாக உள்ள புதிய படத்தையும் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கின்றனர். முகமூடி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். கே.கே.ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸுடன் இணைந்து கோபி கிருஷ்ணா தயாரிக்கிறார்.

இதுகுறித்த அறிவிப்பை பிரபாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon