மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

சிறுமிகள் மீது பாலியல் வன்முறை : இழப்பீடு நிர்ணயம்!

சிறுமிகள் மீது  பாலியல் வன்முறை : இழப்பீடு நிர்ணயம்!

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள், பெண்களுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டை போன்றே அதே அளவில் பெற்றுக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று(செப்—6) தெரிவித்துள்ளது.

தேசிய சட்ட சேவை அமைப்பு பாலியல் வன்முறையால் உயிரிழந்த பெண்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் இழப்பீடுத் தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இதே திட்டத்தை பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கும் உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், தேசிய சட்ட சேவை அமைப்பின் இழப்பீடுத் திட்டமானது போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் சிறுவர் சிறுமிகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இச்சட்டத்தின் கீிழ் பாதிக்கப்படும் சிறுவர் சிறுமிகளுக்கு முறையாக இழப்பீடு நிர்ணயிக்கப்படும் வரை இந்த திட்டமானது அமல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

தேசிய சட்ட சேவை அமைப்பின் இழப்பீடானது பாலியல் வன்முறையால் உயிரிழந்தவர்களுக்கு 5 லிருந்து அதிக பட்சமான 10 லட்சம் ரூபாய் வரையிலும், ஆசிட் தாக்குதலினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதாவது முகம் சிதைக்கப்பட்டிருந்தால், 7லிருந்து அதிகபட்சமாக 8 லட்சம் வரையிலும், இயற்கைக்கு மாறான பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தால் குறைந்த பட்சமாக 4 லட்சமும் அதிக பட்சமாக 7 லட்சமும், பாலியல் வன்முறையினால் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், அல்லது தாக்குதலினால் கருத்தரிக்கும் ஆற்றலையே இழந்திருந்தால் 2லிருந்து 3 லட்சம் வரையிலும் இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. தற்போது இதே திட்டமானது சிறுவர் சிறுமிகளுக்கும் நீட்டிக்கப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon