மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

அழகிரி பேரணிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு!

அழகிரி பேரணிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு!

அழகிரி தலைமையில் நடைபெற்ற அமைதிப்பேரணி தமிழக அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று(செப்டம்பர் 6) செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “தங்களின் அணை உடைந்துவிடும் என்பதற்காகவே கர்நாடக தமிழகத்திற்கு நீரைத் திறந்துவிட்டுள்ளது. கர்நாடகத்தைப் பொறுத்தவரை தமிழகம் நீர் வழிந்தோடும் பகுதியாக உள்ளதே தவிர பாசனத்திற்கான பகுதியாக இல்லை. ரஃபேல் விவகாரம் தொடர்பாக தெளிவான பதிலை பிரான்ஸ் நாட்டு அரசாங்கமே தெரிவித்துவிட்டது. இதில் விதிமீறல்கள் கிடையாது.

விமானத்தில் பயணிக்கும்போது அதன் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். விமர்சனம் கூடாது என்று சொல்லவில்லை. எங்களை தொந்தரவு செய்யாத அளவு விமர்சனம் செய்யுங்கள்.

திமுக ஒழிக என்று நேற்று திமுகவினரே ஊர்வலம் நடத்தியுள்ளனர். அப்படியிருக்கும்போது, பாஜக ஒழிக என்று திமுக தலைவர் சொன்னால் என்ன, சொல்லாவிட்டால் என்ன? அழகிரி தலைமையில் நடைபெற்ற அமைதிப்பேரணி தமிழக அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றார்.

அழகிரியை பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு, ஆமாம் திமுக செயல்படுவதும் பாஜகவால்தான், திமுகவில் உள்ள சிலர் வெளியில் வந்து செயல்படுவதும் பாஜகவால்தான். அதிமுக செயல்படுவதும் பாஜகவால்தான். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதுபோல். பாஜக சொல்வதை வைத்துத்தான் அரசியல் செய்ய வேண்டிய நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், எந்தக் கட்சியையும் ஆட்டுவிப்பதற்கோ, உடைப்பதற்கோ, எந்த கட்சிக்கும் அடிமையாய் போவதற்கோ பாஜக தயாராக இல்லை” என்று பதிலளித்தார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon