மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

அரசியல்வாதியாக விஜய் தேவரகொண்டா

அரசியல்வாதியாக விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் நோட்டா படத்தின் ஸ்நீக் பீக் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டு கவனம்பெற்று வருகிறது.

இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் நோட்டா. இந்தப்படத்தின் வாயிலாக அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகவுள்ளார். அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற படங்கள் அடுத்தடுத்து மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதால் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது.

சத்யராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் விஜய் தேவரகொண்டா அரசியல்வாதிபோல தோன்றி நடித்துள்ளார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon