மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

மின்னணு சந்தை பரிவர்த்தனை: அரசு நம்பிக்கை!

மின்னணு சந்தை பரிவர்த்தனை: அரசு நம்பிக்கை!

அரசு மின்னணு சந்தையில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளின் மதிப்பு 10,000 கோடி டாலரை எட்டும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 5ஆம் தேதியன்று டெல்லியில் அரசு மின்னணு சந்தைக்கான தேசியத் திட்டத்தை மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சரான சுரேஷ் பிரபு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு மின்னணு சந்தையில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளின் மதிப்பு 10,000 கோடி டாலரை எட்டும் என்று கூறினார். அரசு மின்னணு சந்தையில் சரக்குகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்குத் தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுரேஷ் பிரபு வலியுறுத்தினார்.

தற்போது, அரசு மின்னணு சந்தையில் அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே பொருட்களையும், சேவைகளையும் வாங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அரசுக்காக வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும் தளமாக 2016ஆம் ஆண்டில் அரசு மின்னணு சந்தையை மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இச்சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவை அதிகரிப்பதற்கு அரசு மின்னணு சந்தை நிர்வாகம் திட்டமிட வேண்டுமென்றும் சுரேஷ் பிரபு கேட்டுக்கொண்டார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon