மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

நாளை முதல் 412 நீட் மையங்கள் செயல்படும்!

நாளை முதல் 412 நீட் மையங்கள் செயல்படும்!

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படத் தொடங்கும் என்று தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 6) தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் கைவினைப் பொருள் கண்காட்சியொன்றைத் தொடங்கி வைத்துப் பேசினார் செங்கோட்டையன். அப்போது, “மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு 3,200 ஆசிரியர்கள் மூலம் நீட் தேர்வுப் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படத் தொடங்கும்” என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இருந்து எத்தனை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத இருந்தாலும், அவர்கள் அண்டை மாநிலத்திற்குச் சென்று தேர்வு எழுதும் நிலை இனி வராது. மேலும்,ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தும் என்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon