மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

உடற்பயிற்சியின்மை: 140 கோடி பேருக்கு நோய்கள்!

உடற்பயிற்சியின்மை: 140 கோடி பேருக்கு நோய்கள்!

போதிய உடற்பயிற்சியின்மை காரணமாக, உலகில் 140 கோடி மக்கள் உயிருக்கு ஆபத்தான கடும் நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவீன உலகில் மக்களுடைய உடல்நிலையைப் பராமரித்துக்கொள்ள நேரமில்லை. அந்த அளவுக்கு, எந்திரத்தனமான வாழ்க்கையை அனைவரும் வாழ்ந்து வருகின்றனர். இதனால், போதிய உடற்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் கூடக் குறைந்து வருகிறது.

இதுதொடர்பாக, 2016ஆம் ஆண்டு ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 168 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் பல தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, வளர்ச்சி அடைந்த நாடுகளில், வசதிமிக்க வாழ்க்கை முறை காரணமாக மூன்றில் ஒரு பங்கு பெண்களும், நான்கில் ஒரு பங்கு ஆண்களும் இதயநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றாடம் குறைந்தபட்ச உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், இதுபோன்ற நோய் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும் எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. வளரும் நாடுகளை விடவும், வளர்ந்த நாடுகளில் மனப்பிறழ்வு, இதயநோய் போன்ற பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடற்பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையைச் சீராக்குகிறது. இதயநோய், நீரிழிவு, உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும். மேலும் உடற்பயிற்சியானது மனவளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகிறது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon