மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

தலித் வார்த்தையை பயன்படுத்துவதற்கு வழக்கு!

தலித்  வார்த்தையை பயன்படுத்துவதற்கு வழக்கு!

மும்பை உயர் நீதிமன்றம் தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கும் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்க மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக மத்திய அமைச்சரும் குடியரசுக் கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே நேற்று (செப்-6)தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சில நாட்களுக்கு முன்னதாக அனைத்து ஊடகங்களுக்கும் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அதற்கு பதிலாக அட்டவணை சாதியினர்(எஸ்.சி) என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறியிருந்தது. இதனைத்தொடர்ந்து மும்பை உயர் நீிதிமன்றம் மகாராஷ்டிரா அரசுக்கு தலித் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சரான ராம்தாஸ் அத்வாலே நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, தலித் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போர்க் குரலாகும். இது அவமானகரமான வார்த்தை அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த வார்த்தையை கவலைக்குரியதாக மாற்றக்கூடாது. ஊடகங்கள் தலித் என்ற வார்த்தையையோ அல்லது அட்டவணை சாதியினர் என்ற வார்த்தையையோ பயன்படுத்துவது அவர்கள் விருப்பமே. அதை தடைசெய்வது நியாயமற்ற ஒன்றாகும் என்று குறி்ப்பிட்டுள்ளார்.

அதே சமயத்தில் மோடி அரசில் அங்கம் வகிக்கும் இன்னொரு தலித் அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் கூறுகையில், தலித் என்ற வார்த்தை இயற்கையில் போராட்டக் குணமிக்கதுதான். தலித் என்றோ அல்லது அட்டவணை சாதியினர் என்றோ, எந்த வார்த்தையும் நீங்கள் எந்த வார்த்தையையும் பயன்படுத்தலாம். அந்த மக்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறையை நிறுத்தினால் இது போன்ற விவாதங்களுக்கு இடமே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon