மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

மதுரையில் 144 தடை!

மதுரையில் 144 தடை!

மூக்கையாத்தேவரின் நினைவு நாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 6) 144 தடை ஆணை பிறப்பித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் நடராஜன்.

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில், கடந்த 1952 முதல் 1979 வரை சட்டமன்ற உறுப்பினராக வென்று சாதனை படைத்தவர் மூக்கையாத்தேவர். அவரின் 39ஆவது நினைவு நாளை முன்னிட்டு, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்துள்ள மூக்கையாத்தேவர் நினைவிடத்திற்கு முக்கியப் பிரமுகர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நினைவு நாளன்று வருபவர்கள் வாடகை வண்டிகளில் செல்வதற்கும், திறந்த வாகனங்களில் செல்வதற்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தடை விதித்துள்ளார். மூக்கையாத்தேவர் நினைவு தின அனுசரிப்புக் கூட்டம் காரணமாக, மாவட்டத்தில் எந்தவிதச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையானது, புதன்கிழமை (செப்டம்பர் 5) மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon