மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

அயனாவரம் சிறுமி: 17 பேர் மீது குண்டர் சட்டம்!

அயனாவரம் சிறுமி: 17 பேர் மீது குண்டர் சட்டம்!

சென்னை அயனாவரம் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளைப் பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டினார். இதையடுத்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் காவலையடுத்து, அவர்கள் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை ஜாமீனில் விடுவிப்பது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால், இவர்கள் ஓராண்டுக்கு ஜாமீன் பெற முடியாது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon