மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

நெஹ்ராவுக்குக் கிடைத்த புரமோஷன்!

நெஹ்ராவுக்குக் கிடைத்த புரமோஷன்!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா தற்போது பயிற்சியாளராகப் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம்வந்த ஆசிஷ் நெஹ்ரா, தனது 18 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தை 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடித்துக் கொண்டார். அதன் பிறகு இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார். பெங்களூரு அணி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு இப்போதே ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது. முன்னதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டனை அந்த அணியின் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் நியமித்திருந்தது. தற்போது கிறிஸ்டனுடன் இணைந்து ஆசிஷ் நெஹ்ராவும் பயிற்சியாளராகச் செயல்படுவார் என்று பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினையடுத்து நெஹ்ரா, "கடந்த ஆண்டு பெங்களூரு அணியின் பயிற்சி குழுவில் சேர எனக்குப் பாக்கியம் கிடைத்தது. அதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக உணர்கிறேன். என்னைத் தேர்வு செய்துள்ள அணி நிர்வாகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த சீசனில் அணியுடன் இணைந்து வெற்றிகரமான பயணத்தை தொடங்க முயற்சி செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 சேர்த்து இதுவரை 163 போட்டிகளில் விளையாடியுள்ள நெஹ்ரா, 235 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்தியா வென்றுள்ள இரு உலகக்கோப்பை (ஒருநாள் மற்றும் டி20), இரண்டு ஆசியக் கோப்பை, ஒரு சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர்களில் இடம்பிடித்திருந்தார்.

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon