மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

‘பைக் ரேஸால்’ அறிமுகமாகும் விஜய் பட பிரபலம்!

‘பைக் ரேஸால்’ அறிமுகமாகும் விஜய் பட பிரபலம்!

விஜய் கதாநாயகனாக நடித்த சில படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த டி.ஆர்.பாலா தற்போது புதிய படத்தை இயக்கவுள்ளார்.

பல விளம்பரப் படங்களை இயக்கியவரும், விஜய்யின் வேலாயுதம், ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவருமான டி ஆர். பாலா ‘46’ என்கிற படம் வாயிலாக தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

‘காத்திருப்போர் பட்டியல்’ எனும் படத்தில் நடித்த சச்சின் மணி மற்றும் ‘பீச்சாங்கை’ படத்தில் நடித்த கார்த்திக் ஆகிய இருவரும் இதில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். புதுமுகங்களான மீனாட்சி, நவினி ஆகியோர் நாயகிகளாக இதில் அறிமுகமாகின்றனர். இவர்களுடன்‘கலக்கப்போவது யாரு’ புகழ் குரேஷியும் நடிக்கிறார்.

சென்னையில் இரவு நேரங்களில் நடைபெறும் சட்டத்திற்கு புறம்பான பைக் ரேஸ் குறித்து விரிவாக அலசும் படமாக இது அமைக்கப்படவிருக்கிறது. இந்தப்படம் பைக் ரேஸ் பற்றிய படம் எனும் காரணத்தாலேயே பைக் ரேஸ் ஜாம்பவானாக அறியப்படும் வேலன்சியோ ரோஸ்ஸியின் பைக் எண்ணான 46 படத்தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது எனவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இயக்குநர் டி.ஆர்.பாலா , விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பணிபுரிந்த அனுபவமிக்கவராதலால் அவர் இயக்கத்தில் படமாக்கப்பட்டு வரும் இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் கவனம் பெருகியுள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon