மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

சிறப்புக் கட்டுரை: ஆயுஷ்மான் பாரத் நடைமுறைக்குப் பொருந்துமா?

சிறப்புக் கட்டுரை: ஆயுஷ்மான் பாரத் நடைமுறைக்குப் பொருந்துமா?

மின்னம்பலம்

பா.சிவராமன்

குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை. அதுவும் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளில்கூட. 10.74 கோடிக் குடும்பங்கள் - அதாவது சுமார் 50 கோடி உறுப்பினர்கள் - பயன்பெறுவர். இதுதான் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டம். இந்தத் திட்டத்தின் சில விவரங்களை முதலில் பார்ப்போம்.

திட்டத்தின் கூறுகள்

1. ஆயுஷ்மான் பாரத் என்றால் 'இந்தியர்கள் நீடூழி வாழ்க' திட்டம் என்று பொருள் கொள்ளலாம். தேசிய சுகாதாரப் பாதுகாப்பு மிஷன் என்றும் இது அழைக்கப்படும்.

2. இப்போதுள்ள ராஷ்ட்ரிய ஸ்வாஸ்த்ய பீமா யோஜனா (RSBY) மற்றும் முதியோர் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் (SCHIS) ஆகியன இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். ஆனால் ESI இதன் கீழ் வராது.

3. ரூ.5 லட்சம் சிகிச்சையை அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் பொது மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

4. இதன் பயனாளிகள் சமூக - பொருளாதார சாதி சென்சஸ் (SECC) விவரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவார்கள்.

5. சிகிச்சைக்கு ஆகும் செலவைக் கட்டுப்படுத்த எந்தெந்த சிகிச்சைக்கு எத்தனை ரேட்டு என்று அரசால் முன்கூட்டியே ரேட் நிர்ணயம் செய்யப்படும்.

6. இதற்கான பிரீமியம் (காப்பீட்டுக் கட்டணத்துக்கான செலவு) மாநிலங்கள் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு கட்டும் பிரீமியம் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். (இது உத்தேசமாக ரூ.1,200 ஆக இருக்கும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன). இதை மத்திய அரசும் மாநிலங்களும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்வர், பயனாளிகள் பிரீமியம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

7. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மாநில அளவில் மாநில சுகாதார ஏஜென்சி (SHA) அமைக்கப்படும். அகில இந்திய அளவில் மத்திய சுகாதார அமைச்சர் தலைமையில் ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு மிஷன் கவுன்சில் (AB-NHPMC) அமைக்கப்படும். மாநில சுகாதார ஏஜென்சிகள் டிரஸ்ட் ஒன்றின் வாயிலாகவோ அல்லது சொசைட்டி மூலமாகவோ அல்லது லாப நோக்கின்றி இயங்கும் கம்பெனியொன்றின் வாயிலாகவோ அல்லது மாநில நோடல் ஏஜென்சி ஒன்றின் மூலமாகவோ அல்லது இதற்கென அமைக்கப்பட்ட புதியதோர் அமைப்பின் மூலமாகவோ இதை அமல் செய்யலாம்.

8. மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஓர் இன்சூரன்ஸ் கம்பெனி மூலமாகவோ அல்லது டிரஸ்ட்/சொசைட்டி வாயிலாகவோ இதை அமல் செய்யலாம்.

9. இத்திட்டத்தின் கீழ் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனை சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்படும். அதிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகளுக்கு (in-patients) மட்டுமே சிகிச்சையளிக்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் வெளியிலிருந்து சிகிச்சை பெறத்தக்க வெளிநோயாளிகளுக்கு (outpatients) அல்ல.

10. இத்திட்டம் இந்த ஆண்டு செப்டம்பரிலிருந்து நடைமுறைக்கு வரும். முதலில் 10 மாநிலங்களில் பரிசோதனைத் திட்டமாக (pilot project) இது அறிமுகப்படுத்தப்படும்.

11. இந்தத் திட்டத்துக்காக இந்த ஆண்டு ரூ.12,000 கோடி செலவிடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தகவல்களுக்கான ஆதாரம்:

இத்திட்டத்தில் எந்தெந்த சிகிச்சைகளுக்கெல்லாம் இதன்கீழ் சிகிச்சையளிப்பது, எந்த சிகிச்சைக்கு எத்தனை கட்டணம் நிர்ணயிப்பது, எந்தெந்த மாநிலங்கள் எப்போதிலிருந்து இதை எந்த அமைப்பு வாயிலாக அமல்படுத்தப் போகின்றன ஆகிய விஷயங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. எனவே முழுவிவரங்கள் இன்னும் தெரியாமல் இதை மதிப்பிடுவதோ விமர்சனம் செய்வதோ முறையல்ல. ஆயினும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த ஆண்டின் பட்ஜெட்டில் இத்திட்டத்தை அறிவித்ததும் ஊடகங்களில் ஒரு சுற்று விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முக்கிய அம்சங்களை மட்டும் இங்கு தொகுத்தளிக்கிறோம்.

நிதி ஒதுக்கீடு போதுமானதா?

இந்தத் திட்டத்தில் 10 கோடிக் குடும்பங்கள் - அல்லது 50 கோடி உறுப்பினர்கள் - அனைவருமே ரூ,5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்கள் என ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் மொத்தம் இதற்காகும் செலவு ரூ.250,00,000 கோடி. அனைவரும் முழுமையாகச் செலவழிக்க மாட்டார்கள். வெறும் 10 சதவிகிதத்தினர் மட்டுமே - அதாவது ஒரு கோடி குடும்பங்கள் மட்டுமே - முழுமையாக ரூ.5 லட்சத்தையும் செலவழிக்கின்றனர் என்று வைத்துக்கொண்டால்கூட மொத்த செலவு ரூ.25 லட்சம் கோடியாக இருக்கும். இது 2018--19 ஆண்டின் மொத்த வருவாய் பட்ஜெட்டைவிட சுமார் ரூ.4 லட்சம் கோடி அதிகம். இத்திட்டத்துக்கு மோடி அரசு ஒதுக்கியிருப்பதாக அறிவித்துள்ள தொகையோ ரூ.12,000 கோடி மட்டுமே. இந்தத் தொகையாக கொண்டு சராசரியாக குடும்பம் ஒன்றுக்கு 1,200 ரூபாய்க்கு (ஒரு நபருக்கு தலையொன்றுக்கு ரூ.240 வரை) மட்டுமே சிகிச்சையளிக்க முடியும்.

பயனாளிகள் தேர்ந்தெடுப்பில் குளறுபடிகள்

கிராமப்புறங்களில் கச்சா சுவரையும் கூரையையும் கொண்ட, ஒரே ஓர் அறை மட்டுமே உள்ள வீட்டில் வசிப்பவர்கள், வயது வந்தவர் (16 வயதிலிருந்து 50 வயது வரையுள்ளவர்கள்) யாரும் இல்லாத குடும்பங்கள், ஆண்கள் இல்லாத பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், உடல் ஊனமுற்ற நபர் ஒருவரைக் கொண்ட அல்லது உடல் ஊனம் இல்லாத வயது வந்த நபர் எவரும் இல்லாத குடும்பங்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள், பிச்சை வாங்கிப் பிழைப்பவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மிகவும் புராதனமான பழங்குடிகள் மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் ஆகியோர் இத்திட்டத்தின் பயனாளிகளாகச் சேர்க்கப்படுவர்.

நகர்ப்புறங்களில் கந்தல் பொறுக்குபவர்கள், பிச்சையெடுப்பவர்கள், இல்லப் பணியாளர்கள், வீதி வியாபாரிகள், செருப்பு தைப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பிளம்பர்கள், மேஸ்திரிகள், கூலித்தொழிலாளர், பெயின்ட்டர்கள், வெல்டர்கள், காவலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், நகர சுத்தித் தொழிலாளர்கள், தோட்ட வேலை செய்பவர்கள், வீட்டில் இருந்துகொண்டு வேலை செய்பவர்கள், கைவினைஞர்கள், தையற்காரர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், ரிக்‌ஷா தொழிலார்கள், கடைச் சிப்பந்திகள், பியூன்கள், வெயிட்டர்கள், எலெக்ட்ரிஷியன்கள், மெக்கானிக்குகள், சலவைத் தொழிலாளர்கள் போன்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் எண்ணிக்கை 50 கோடி வருமா என்பது பெரும் கேள்விக்குறி. குடிசைப் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரையும் சேர்த்திருந்தால் வறுமையிலிருப்பவர்கள் ஏகப் பெரும்பான்மையினர் சேர்க்கப்பட்டிருப்பார்கள்.

பிளம்பர்கள், வெல்டர்கள், எலெக்ட்ரிஷியன்களைப் பிச்சைக்காரர்களோடு ஒரே தட்டில் வைப்பதன் நியாயம் என்ன என்று புரியவில்லை.

சிறு விவசாயிகள், வேளாண்சாரா கிராமப்புறத் தொழிலாளர்கள் அனைவருமே இந்தப் பட்டியலிலிருந்து விலக்கப்படுவர்.

யாருக்கு அதிக லாபம்?

மருத்துவமனைகள் சிகிச்சையளித்ததால் அவற்றுக்குக் காப்பீட்டு நிறுவனங்கள் பணம் செலுத்தும். பதிலுக்கு அரசு அவர்களுக்குப் பணம் கொடுக்கும். கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யலாம்.

மூட்டுமாற்று, இடுப்பெலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.9000

இதய ரத்த நாள அடைப்புகளுக்கு ஸ்டென்ட் பொருத்த ரூ.40,000

பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு ரூ .1.1 லட்சம்

சிசேரியன் பிரசவத்துக்கு ரூ.9000

புற்றுநோயால் கர்ப்பப்பையை அகற்ற ரூ.50,000

என அரசு விலை நிர்ணயித்துள்ளது. ஆனால், மருத்துவச் சந்தையில் நடப்புக் கட்டணம் ரேட் இதைவிட 5 மடங்கிலிருந்து 10 மடங்கு அதிகம். அரசு நிர்ணயித்த கட்டணத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்கெனவே நிராகரித்துள்ளது. இப்படிக் குறைந்த கட்டணம் நிர்ணயிப்பதால் நட்சத்திர மருத்துவமனைகள் இத்திட்டத்தில் சேராமல் ஒதுங்கும். அவ்வளவாகப் பிரபலமாகாத தனியார் மருத்துவமனைகளும் அரசு மருத்துவமனைகளும்தான் 50 கோடிப் பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக வேண்டும். சிகிச்சையின் தரம் எப்படியிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

கூட்டாட்சிக்கு அடி

இந்தத் திட்டத்தோடு மாநில அரசின் திட்டங்களும் இதோடு இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவத் திட்டங்களைப் பொறுத்தவரை வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு நியதிகளைக் கொண்டிருக்கின்றன. இவையனைத்தையும் ஒரே அகில இந்திய திட்டத்தோடு இணைப்பது நடைமுறைக்கு ஒத்துவருமா என்பது முக்கியமான கேள்வி. உள்ளூர் நிலவரங்கள், தேவைகள் ஆகியவற்றைப் பொறுத்து மாநிலத் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் அகில இந்தியத் திட்டத்தில் இணைத்துவிட்டால் ஒவ்வொரு மாநிலத்துக்கான பிரத்யேகமான தேவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா என்ற ஐயத்தையும் இந்தத் திட்டம் உருவாக்கியிருக்கிறது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon