மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

நாகாலாந்து மக்களுக்கு உதவுக: பினராயி விஜயன்!

நாகாலாந்து மக்களுக்கு உதவுக: பினராயி விஜயன்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகாலாந்திற்கு கேரள மக்கள் உதவ வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நாகாலாந்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள முக்கிய நகரங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 12பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 3000பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிபேர், பெக், தொபு, டியூன்சங் ஆகிய பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மாநிலத்தில் வெள்ள சீரமைப்புக்கு ரூ.800 கோடி தேவைப்படும் என அம்மாநில முதல்வர் நெப்யூ ரியோ மத்திய அரசிடம் கோரியுள்ளார். மேலும் வெள்ள நிவாரண நிதி வழங்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவம் பார்ப்பதற்கு அமெரிக்கா சென்றுள்ள பினராயி விஜயன் நேற்று (செப்டம்பர் 5)தனது முகநூல் பக்கத்தில், “வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்கொண்ட நெருக்கடிகளை தற்போது அவர்களும் எதிர்கொண்டு வருகின்றனர். நாம் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம். நாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது நாகாலாந்து துணை முதல்வர் திருவனந்தபுரம் வந்து நமது துயரத்தில் தோளோடு தோள் கொடுத்தார்.

அவர்கள் கேரளாவிற்கு உதவினார்கள். அதே அன்பை மனதில் வைத்து நாமும் இந்த தருணத்தில் அவர்களுக்குத் தோள்கொடுத்து உதவ வேண்டும்” என பதிவிட்டுள்ளார்

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon