மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

வீட்டுக்காவலை நீட்டிக்க நீதிமன்றம் உத்தரவு

வீட்டுக்காவலை நீட்டிக்க  நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 29ம்தேதியன்று கைது செய்யப்பட்ட 5 மனித உரிமை போராளிகளின் வீட்டுக்காவலை வரும் 12ம்தேதி வரை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 29 தேதியன்று ஹைதராபாத்,மும்பை,பரிதாபாத், மற்றும் புது டெல்லி ஆகிய மாநிலங்களிலிருந்து கவிஞர் வராவர ராவ்,மனித உரிமைப்போராளிகள் வெர்மன் கான்சால்வ்ஸ், அருண் பெராரியா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் மற்றும் சமூகச்செயல்பாட்டாளர் கௌதம் நவ்லகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

நேற்று(செப்-5) உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில்,மகாராஷ்டிரா போலீசார் கைது செய்யப்பட்ட மனித உரிமைப்போராளிகளுக்கு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புண்டு. அவர்கள் பெரிய அளவில் ஆயுத கிளர்ச்சியை மேற்கொள்ள தயாரித்துக் கொண்டிருப்பதாக தெரிவி்த்தனர். அவர்களை வீட்டுக்காவலில் வைத்து விசாரிப்பது சாத்தியமற்றது. போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் போலீசார் கோரினர்.

இதற்கிடையில், புனே போலீஸ் துணை கமிஷனர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், இந்த விசயத்தில் உச்ச நீதிமன்றம் தவறு செய்வதாக கூறினார். இன்று கூடிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு போலீசாரின் செயலைக் கண்டித்தது. போலீசை கட்டுபாட்டுடன் இருக்க மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினா். மேலும் வழக்கை வரும் 12 வரை ஒத்தி வைத்தனர். அதுவரை மனித உரிமை போராளிகளின் வீட்டுக்காவலை நீட்டிக்கவும் உத்தரவிட்டனர்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon