மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

வேகமெடுக்கும் லாரி விற்பனை!

வேகமெடுக்கும் லாரி விற்பனை!

உள்கட்டமைப்புத் துறையில் ஏற்பட்டுள்ள வலுவான தேவை காரணமாக லாரி விற்பனை சூடுபிடித்துள்ளது.

லாரிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஆகஸ்ட் மாதத்தில் லாரிகள் விற்பனை உத்வேகத்தைப் பெற்றுள்ளது. முக்கியத் துறைகளில் தேவை வலுவாக உயர்ந்தது லாரிகள் விற்பனைக்கு ஆதரவாக இருந்துள்ளது. லாரி உற்பத்தித் தொழிற்துறையின் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், முன்னணி நிறுவனங்களின் விற்பனை மிக வலுவாக இருந்துள்ளது. சாலைக் கட்டுமானம், பாசனக் கட்டுமானத் திட்டங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான செலவுகளை அரசு அதிகரித்தது போன்ற காரணங்களால் தேவை உயர்ந்து, அதன் விளைவாக லாரிகள் விற்பனை அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு வர்த்தக வாகன விற்பனை 26 விழுக்காடு அதிகரித்து 39,859 ஆக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் விற்பனை 16 விழுக்காடு அதிகரித்து 12,715 ஆக உயர்ந்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் விற்பனை (உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி உட்பட) ஆகஸ்ட் மாதத்தில் 24 விழுக்காடு அதிகரித்து 13,158 ஆக உயர்ந்துள்ளது. வி.இ கமர்ஷியல் வெஹிக்கில்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு லாரி மற்றும் பேருந்து விற்பனை 27 விழுக்காடு அதிகரித்து 4,228 ஆக உயர்ந்துள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon