மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

விருதுநகர்: சவுடு மணல் குவாரிக்குத் தடை!

விருதுநகர்: சவுடு மணல் குவாரிக்குத் தடை!வெற்றிநடை போடும் தமிழகம்

விருதுநகரில் சவுடு மணல் குவாரிக்கு அனுமதி வழங்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை உள்பட மூன்று இடங்களில் சவுடு மணல் குவாரி அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. குவாரியில் சவுடு மண் அள்ளுவதற்காக அனுமதி பெற்றிருந்த நிலையில், ஆற்று மணல் அள்ளப்படுவதாக விருதுநகர் கிழக்குப்பட்டியைச் சேர்ந்த மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

ஆற்று மணலை அள்ளுவதால் அரசுக்குக் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதன் காரணமாக சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்கத் தடை விதிக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (செப்டம்பர் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, விருதுநகர் மாவட்டத்தில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்கத் தடை விதித்து உத்தரவிட்டனர் நீதிபதிகள். இந்த மனு தொடர்பாக கனிமவளத் துறை உதவி இயக்குநர் மற்றும் காரியாபட்டி, திருச்சுழி வட்டாட்சியர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon