மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

377 ரத்து: த்ரிஷா முதல் ஹியூமா வரை வரவேற்பு!

377 ரத்து: த்ரிஷா முதல் ஹியூமா வரை வரவேற்பு!

தன்பாலின உறவானது சட்டவிரோதம் அல்ல எனும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திரைப்பிரபலங்கள் பலர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377இன் படி , தன்பாலின உறவானது சட்டவிரோதம் எனக் கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பல ஆண்டுகளாக வழக்குகள் நடந்துவந்தநிலையில், தன்பாலின உறவு சட்டவிரோதமானதல்ல என உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 6 ) தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து இந்த தீர்ப்புக்கு பல்வேறு திரைப் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள நடிகை த்ரிஷா, இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில்“ #சமஉரிமை #பிரிவு377 #ஜெய்ஹோ” போன்ற ஹேஸ்டேக்குகளுடன் இதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தத் தீர்ப்பை வரவேற்று முன்னதாக யுனைடெட் நேஷன்ஸ் இந்தியா பதிவிட்டுள்ள பதிவையும் தனது பக்கத்தில் அவர் ரீட்வீட் செய்துள்ளார்.

மேலும் சில பாலிவுட் பிரபலங்கள் இதை வரவேற்று குறிப்பிட்டுள்ளதாவது:-

கரன் ஜோஹர்

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. இதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இந்தத் தீர்ப்பானது மனிதநேயத்திற்கும், சம உரிமைகளுக்கும் உறுதுணையாக இருக்கும். நாடு திரும்ப சுவாசிக்க ஆரம்பித்துள்ளது.

சோனம் கபூர்

இந்தமாதிரியான இந்தியாவில் வசிக்கவே நான் விரும்புகிறேன். இந்த இந்தியாவையே நேசிக்கிறேன்.

பிரீத்தி ஸிந்தா

இந்தத் தீர்ப்பைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. யாரையாவது நேசிக்க விரும்புகிறீர்களேயானால் எந்தத் தடையுமில்லாமல் அவர்களை நேசியுங்கள்.

ஹியூமா குரேஷி

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. நமது அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon