மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

கிருஷ்ணர் அவமதிப்பு: கோவையில் புகார்!

கிருஷ்ணர் அவமதிப்பு: கோவையில் புகார்!

கிருஷ்ணரையும், பெண்களையும் அவமதித்ததாக கூறி காங்கிரஸ் கட்சியின் ஹிமாச்சல பிரதேச முன்னாள் எம்எல்ஏ-வான நீராஜ் பாரதி மீது, பாஜக அகில இந்திய துணை தலைவர் முருகானந்தம் கோவை மாநகர காவல் ஆணையரிடம் இன்று (செப்டம்பர் 6) புகார் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஹிமாச்சல பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏ-வான நீராஜ் பாரதி. கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பர் 2) அன்று கிருஷ்ணரை அவமதிப்பது போன்ற புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் முருகானந்தம் இன்று (செப்டம்பர் 6) அளித்துள்ள புகார் மனுவில், “நாடு முழுவதும் மக்கள் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது நீராஜ் அதை அவமதித்துவிட்டார். அதோடு மட்டுமில்லாமல், இன்று கிருஷ்ணரின் பிறந்த நாள் என்று பதிவிட்டு சாதாரண இந்து பெண்களின் உணர்வுகளையும் புண்படுத்தி உள்ளார்.

சமூகத்தில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். எங்களின் நம்பிக்கையை சிதைக்கும் தரம் தாழ்ந்த சிந்தனைகளை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இதுபோன்ற கருத்துகளை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ஒற்றுமைக்கும், அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் மத துவேச கருத்துக்களை அனுமதிக்க கூடாது.

கிருஷ்ண ஜெயந்தி அன்றே இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் சமூக வலை தளத்தில் மிக தைரியமாக பதிவிட்டுள்ளார். சமூக வலை தளங்களில் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே நாடு முழுவதும் இதுபோன்ற கருத்துக்களை பதிவிடுகின்றனர். இதனால் நாட்டில் பன்முக தன்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது. நான் நாட்டின் குரலற்ற மக்களுக்காகவே இதை எழுதுகிறேன். குற்றவாளிகள் சர்வசாதாரணமாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர். நீராஜ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மிக கடுமையான தண்டனை அவருக்கு அளிக்கப்பட வேண்டும்”என மனுவில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon