மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

7துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை!

7துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, 7 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், இன்று கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமேற்கு வங்கக் கடலில், மேற்கு வங்கத்தின் திகா (Digha) என்ற இடத்திலிருந்து, சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னை எண்ணூர், பாம்பன், நாகப்பட்டினம், புதுச்சேரி, கடலூர் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இன்று (செப்டம்பர் 6) பிற்பகல் 2 மணிக்கு 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த புயல் சின்னம், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்து விடக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழக வானிலையில் நேரடியான பாதிப்பு இருக்காது என்றாலும், கடல் சற்று சீற்றமாகக் காணப்படும் என்றும், மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 9ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய பெருமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon