மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

மறுபடியும் தலைசுத்திருச்சுப்பா: அப்டேட் குமாரு

மறுபடியும் தலைசுத்திருச்சுப்பா: அப்டேட் குமாரு

தூத்துக்குடின்னு பேரை கேட்டாலே ரஜினிக்கு சும்மா அதிருதாம். ஆமா ஏற்கெனவே அங்க போய் அவர் பேசுன பேச்சு தியேட்டருக்கு வர்ற கூட்டத்தை பாதியா குறைச்சுருச்சு. இந்த நிலைமையில இவங்க போய் சார் தூத்துக்குடி சோபியான்னு சொன்னதும் அவருக்கு தலையே சுத்திருச்சாம். அவர் கருத்து சொல்லியிருந்தா ஒரு வாரம் வச்சுருந்து ஓட்டிருப்பாங்க நம்ம நெட்டிசன்ஸ். நோ கமெண்ட்ஸ்ங்குறதால இன்னைக்கு முழுக்க ஓடிகிட்டு இருக்கு. அப்டேட்டை பாருங்க அடுத்து என்ன மேட்டர் ஆரம்பிச்சுருக்குன்னு பார்த்துட்டு வாரேன்.

@BlackLightOfl

ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் அருங்காட்சியகத்தில் ரூ.50 கோடி தங்க டிபன் பாக்ஸ் திருட்டு.

அய்யோ.. அங்க பாத்துட்டு அப்படியே நம்ம பக்கம் பாக்குறாங்களே.. அண்ணே.. நாங்க பிரியாணி அண்டாவை தான் திருடுவோம். டிபன்பாக்ஸ்சை எல்லாம் இல்லை..

@rahimgazali

மு.க அழகிரி திமுகவின் மூத்த தலைவர். கட்சியில் இல்லாவிட்டாலும் அவர் திமுக தலைவர் தான் - பொன்.ராதாகிருஷ்ணன்

இவங்க ஏன் அழகிரிக்காக ரொம்ப தம் கட்டறாங்க. ஏ.டீம், பி.டீம் மாதிரி ஒருவேளை பாஜகவின் இஸட் டீமா இருப்பாரோ அழகிரி?

@Aaathithamizhan

ரஜினிகாந்த் நடித்து வரும் 165வது படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது -செய்தி

- ரஜினியின் 200ஆவது படம் ரிலீஸ் தேதி கூட வந்துவிடும் ஆனால் ரஜினியின் ஆன்மீகக் கட்சியின் பெயர் மட்டும் எப்போ ரிலீஸ் ஆகும் என்று ரஜினிக்கே தெரியாது

@motheenfarooq

ஜிம்முக்கு போறதவிட சிறந்த உடற்பயிற்சி ஒரு ஜீன்ஸ் பேன்ட துவைக்குறது தான்..!!

@saysatheesh

மு.க அழகிரி திமுகவின் மூத்த தலைவர். கட்சியில் இல்லாவிட்டாலும் அவர் திமுக தலைவர் தான் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

யஷ்வந்த் சின்ஹாவுக்கும் பொருந்துமா?

@hiphopkarthi24

நானும் பார்த்துட்டேன் தினமும் ஆபிஸ்க்கு கிளம்பும்போது மட்டும் கடிகார முள் 100மீட்டர் ஒட்டயபந்ததத்தில் ஓடும் வேகத்தில் ஓடும்போல

@mohanramko

உங்ககிட்ட சாமர்த்தியமாக பேசி,உள்ளே இருப்பதை வெளியே கொண்டு வந்துடுவாங்க .....

கடன் கேட்பவர்கள்

@drkvm

எனக்கு மடியில் கனம் இல்லை , வழியில் பயம் இல்லை...

ஏன் ஆதாரங்களை அழிச்சாச்சா....!!!.??

@Kozhiyaar

மோடி சரியா தான்யா வேலை செய்யுறாரு!!

அவர் எப்பவும் இருக்கிற வெளிநாட்டு பண மதிப்பை உயர்த்துகிறார்!

அத விட்டுட்டு எப்பவாச்சும் வர இந்திய பண மதிப்பு உயரவா உழைப்பார்!?

@kumarfaculty

பெட்ரோலுக்கு மாற்று வேண்டும் : நிதின் கட்காரி

அதுக்கும் வரி போடவா?

@palanikannan04

"ஆயா"கிட்ட கதை கேட்டதும், இப்போ "ஆன்ட்ராய்ட்"கிட்ட கதை கேட்பதும்,

90's கிட்ஸ்க்கு மட்டுமே சாத்தியம்..

@mohanramko

நமக்கு கீழ் தானே மக்கள் என்று நினைப்பவர்கள், ஒருநாள் விமானத்தை விட்டு இறங்க வேண்டி வரும் என்பதை மறந்து விடுகிறார்கள்

@hiphopkarthi24

பேச்சிலர் வாழ்க்கையில் கொடுமையான ஒன்று, பக்கத்து வீட்டு சமையல் வாசனை

Boopathy Murugesh

கூட படிச்ச பொண்ணுங்களாம் கிருஷ்ண ஜெயந்திக்கு குழந்தைக்கு வேஷம் போட்டு ரெண்டு நாளா வாட்ஸப்ல ஸ்டேட்டஸ் வச்சுட்டுருக்குதுங்க.

ஆமா அனுமார் ஜெயந்தி என்னைக்குடா வருது? நாம போய் அதையாச்சும் கொண்டாடுவோம்..

@rahimgazali

தினகரன் அளவுக்கு அழகிரி கூட்டம் சேர்த்திருந்தால் திமுகவினரை கொஞ்சம் அசைத்து பார்த்திருக்கலாம்.

ஆனால் இவர் தீபா மாதவன் அளவுக்கு கூட்டம் சேர்த்திருக்கார்.

@Kozhiyaar

புள்ள பிடிக்கறவன விட்டுட்டு புள்ளபூச்சியை போட்டு அடிப்பது போலத்தான், கொள்ளையடிச்சவன் பாஸ்போர்ட்ட தப்பிச்சு ஓடினத்துக்கு பிறகு முடக்கிட்டு, எதிரா கோஷம் போட்ட பொண்ணோட பாஸ்போர்ட்ட முடக்குறது!!!

@Kozhiyaar

நீங்க 80ஸ் கிட் ஆக இருந்தாலும், 90ஸ் கிட் ஆக இருந்தாலும், இப்பொழுது நீங்கள் கிட் இல்லை என்பதே உண்மை!!!

Nelson Xavier

காதலர்கள் என்று ஒரு ஆணையும் பெண்ணையும் அறிமுகப்படுத்துகிற போது அவர்களிடையே உள்ள காதல் மட்டுமே நினைவிற்கு வருகிறது. அப்படித்தான் வரவேண்டும். ஏனெனில் வயதுவந்த ஆண் - பெண்ணின் முடிவை ஒரு முதிர்ச்சியான சமூகம் அங்கீகரிக்கிறது என்பதே அதன் அர்த்தம்.

“ஓரினச் சேர்க்கை” என்கிற வார்த்தையை படிக்கிற போதும், கேட்கிற போதும் பின்னிப் பிணைந்த உடல்களும் படுக்கையறையும் மட்டுமே ஒவ்வொருவரின் நினைவிற்கும் வருகிறது. உண்மையில் உடல் உறவிற்கான விடுதலைக்காகவா இந்த தீர்ப்பு கொண்டாடப்படுகிறது. உண்மையில் இந்த வார்த்தைதான் தமிழ் சமூகத்தில் இப்படிப்பட்ட ஒரு எண்ணத்தை விதைத்து பரவலாக்கியிருக்கிறது. இந்த வார்த்தைகளை உருவாக்கியவர்கள், தேர்ந்தெடுத்தவர்கள், பரவலாக்கியவர்கள் என எல்லோருக்கும் இந்த அநீதியில் பங்கிருக்கிறது.

சிறுபான்மையினர் என்கிற வார்த்தை மத-இன -மொழி-நிறம் என எல்லா பிரிவுகளிலும் இருக்கிறது. அதை உலகம் அங்கீகரித்திருக்கிறது. இதைப்போலவே தங்கள் பாலின அடையாளத்தை, பாலியல் விருப்பத்தை பொது சமூகத்தில் முன்வைக்கிற போது “பாலினச் சிறுபான்மையினர்” என்றே அவர்களை அழைக்க வேண்டும். அதுவே ஜனநாயகத்தை அரசியலாக ஏற்றுக் கொண்ட சமூகத்தின் பாதை.

ஏனெனில் இந்த உறவுகள் வெறும் படுக்கையறை சார்ந்தது மட்டுமில்லை. அவர்கள் தங்களுக்கான வாழ்க்கைத் துணையை, வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள். நட்பு, காதல் தொடங்கி மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம், வளம், வாழ்க்கை என எல்லாமுமிருக்கிறது. இன்றைய தீர்ப்பு நாம் வாழ விரும்பும் வாழ்க்கையை சுயமரியாதையோடும், சமூகத்தின் மதிப்புடனும் நாம் நம்பும் காதலுடனும் வாழ வழி செய்திருக்கிறது.

எல்லோருக்குமான சம நீதிதான் சமூக நீதி என்றால் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு சமூகநீதியின் இன்னுமொரு மைல்கல்.

-லாக் ஆஃப்

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon