மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

ஏமாற்றத்தைத் தாங்க முடியாத தனிமை!

 ஏமாற்றத்தைத் தாங்க முடியாத தனிமை!

ஏமாற்றம் என்பது எந்தவொரு மனிதரையும் சுயபரிகாசம் செய்துகொள்ளத் தூண்டும். இதில் பால் பேதமோ, வயது வித்தியாசமோ கிடையாது. ஏமாற்றத்தின் தொடக்கம் நம்பிக்கையின் சிதறலில் பொதிந்திருக்கிறது. வலியவர் ஏமாற்றுவதும், மெலியவர் ஏமாறுவதும் காலம்தோறும் தொடர்கிறது. ஏமாற்றுவதற்கு, சக உயிரின் மீது அக்கறையில்லாமல் இருப்பதே பெரும் தகுதி. அதனைத் தன்னகத்தே கொண்டுள்ளதாகக் கருதும் எவரும், இந்த விவகாரத்தில் வலிய நிலையை அடைகின்றனர். எஞ்சியவர்கள் அதன் எதிர்நிலையில் நிற்கின்றனர். தங்களது நிலை நிரந்தரமானதல்ல என்பது, இருபக்கமும் இருப்பவர்க்கு நன்கு தெரியும்.

பெண்மையும் முதுமையும் ஏமாற்றத்தின் வலியைத் தாங்கிக்கொள்ளும்போது, அதன் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். முதிய பெண்கள் தங்களது ஏமாற்றத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாத தனிமையில் இருப்பது, அவர்களது பிரச்சினைகளை இன்னும் பூதாகரமாக்கும். இன்று, மனநலப் பிரச்சினைகளுக்கு ஆட்படுபவர்களில் கணிசமானவர்கள் முதிய பெண்கள் தான். குறிப்பாக, வாழ்வு முழுக்க உழைப்பே கதி என்றிருந்தவர்கள் தான். இந்தப் பெண்களின் உழைப்பானது வெறுமனே ஒரு அலுவலகத்தைச் சார்ந்தே இருக்கும் என்று கருத வேண்டியதில்லை. குடும்பம், கணவன், குழந்தைகள் என்றிருப்பவர்களும், மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

குறிப்பிட்ட காலகட்டத்தில், அவர்கள் பல்வேறு உடல் மற்றும் மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிட்ட பின்பு, இயல்பாகவே பெண்களின் மனம் பல குழப்பங்களை எதிர்கொள்ளும். அந்த நேரத்தில் ஏமாற்றம் நிறைந்த அனுபவங்களைக் கடக்கும்போது, அது நிலைமையை மேலும் மோசமாக்கும். அன்புக்கு முக்கியத்துவமின்மை, சுயநலம் சார்ந்த சிந்தனை, பிறரது எண்ணங்களில் அக்கறையின்மை, எந்த விலை கொடுத்தேனும் தனது விருப்பங்களை நிறைவேற்றும் வேட்கை உள்ளிட்ட பல்வேறு எதிர்மறை விதைகள், இன்று மனிதர்கள் மனதில் வேரூன்றிவிட்டன.

இதனால் பாதிக்கப்படும் மனித மனங்களின் ரணங்களைக் குணப்படுத்த வேண்டும். அதற்கு, மனதின் தன்மைக்கேற்றவாறு ஆறுதல் குரல் ஒலிக்க வேண்டியது அவசியம். பிரச்சினையின் வேர் தெரிந்து, அதனைக் குணப்படுத்தும் மருந்துகளை நாட வேண்டியது கட்டாயம். மைண்ட் ஸோன் மருத்துவமனையில் தரப்படும் சிகிச்சைகள், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகளை முன்வைக்கின்றன. இதனை மருத்துவ உளவியல் நிபுணர் சுனில் குமார் மற்றும் உளவியல் மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு:

மைண்ட் ஸோன் மருத்துவமனை
நம்பர் 58/2, முதல் அவென்யூ,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை – 600020
இமெயில்: [email protected]
அலைபேசி: 044-24460101, 9444297058, 9176055660

விளம்பர பகுதி

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon