மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

கிளை நிறுவனத்தை விற்கும் ஏர் இந்தியா!

கிளை நிறுவனத்தை விற்கும் ஏர் இந்தியா!

ஏர் இந்தியாவின் கிளை நிறுவனமான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வைஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து அதன் வாயிலாகக் கடன் சுமையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனம்தான் ஏர் இந்தியா. இந்நிறுவனத்துக்கு 2017 மார்ச் வரையில் ரூ.48,000 கோடிக்கு மேல் கடன் சுமை உள்ளது. கடன் சுமையாலும், வருவாய் இழப்பாலும், நிதி நெருக்கடியாலும் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் அரசின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தற்போது ஏர் இந்தியாவின் கிளை நிறுவனமான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வைஸ் நிறுவனத்தை விற்பனை செய்ய அரசு முடிவுசெய்துள்ளது. இது ஏர் இந்தியாவின் நிலம் சார்ந்த கையாளும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதை விற்பனை செய்வதற்கான பணி நடந்துவருவதாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமான நிறுவனம் வருவாய் இழப்பைச் சந்தித்து வந்தாலும், அதன் கிளை நிறுவனங்களான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வைஸ் ரூ.61.66 கோடியையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ரூ.297 கோடியையும் 2017-18 நிதியாண்டில் பெற்றிருந்தன. ஏர் இந்தியா நிறுவனத்தைப் பலப்படுத்த அதன் உயர்மட்டக் குழு இயக்குநர்களின் எண்ணிக்கையை ஏர் இந்தியா உயர்த்தியுள்ளது. சென்ற மாதம் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான ஒய்.சி.தேவேஸ்வர், ஏர் இந்தியாவின் உயர்மட்டக் குழு இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 7 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon