மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: இயற்கை முறைக்குத் திரும்பும் நிறுவனங்கள்!

சிறப்புக் கட்டுரை: இயற்கை முறைக்குத் திரும்பும் நிறுவனங்கள்!

சப்னா அகர்வால்

இந்தியாவின் பேக்கேஜ் செய்யப்பட்ட நுகர்பொருள் தொழிற்துறை மாறிவிட்டது என்றே கூறலாம். இயற்கையாகத் தயாரிக்கும் பொருட்களை ஆதரிக்கும் பெருமளவிலான மக்கள் ரசாயனக் கலப்புடனான பொருட்களை நிராகரித்து வருகின்றனர். இந்த வகையறாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும், ஏதோ இந்தப் புதுயுகத்தில்தான் நம் மக்கள் இயற்கைப் பொருட்களை விரும்புகின்றனர் என்றோ, அதற்கு முன் அதுபற்றிய விருப்பமோ, விழிப்புணர்வோ இல்லையென்றோ கருதிவிட முடியாது.

பாட்டியின் அழகு சாதன முறைகளான நெல்லிக்காய், பூந்திக் கொட்டை, சிகைக்காய் அடிப்படையில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஷாம்பூ, முல்தானிமுட்டி, மஞ்சள், பயித்தம் மாவு, பால் சார்ந்த அழகு கூட்டும் பொருட்கள் என்று பல காலமாக இயற்கை சார்ந்த பொருட்களுக்கான தேவையும், விருப்பமும் எப்போதும் இருந்து வந்துள்ளது.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய நுகர்வோரில் மூன்றில் ஒரு பங்கினர் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்த விரும்பியதாக கிரோம் டேட்டா அனலிடிக்ஸ் & மீடியா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், இவர்களின் எண்ணிக்கை தற்போது 77 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்? இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தது எது?

இந்த மாற்றத்துக்குப் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் ஒரு பெரும் பங்காற்றியுள்ளது. பாபா ராம்தேவ் தலைமையிலான இந்நிறுவனம் இயற்கை சார்ந்த பல பொருட்களை உற்பத்தி செய்து வெற்றிகரமாகத் தொழில் செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்நிறுவனம் நல்ல வருவாயையும் ஈட்டி வளர்ச்சி பெற்றுள்ளது. ரிலையன்ஸ் ரீட்டைல் லிமிடெட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மூலோபாய அலுவலரான தாமோதர் மால் Supermarketwala: Secrets To Winning Consumer India என்ற புத்தகத்தில், இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஒரு பெரிய தொழில் நிறுவனத்தை (அல்லது பிராண்டை) உருவாக்குவது சாத்தியம் என்பதை நிரூபணம் செய்துள்ளதாக பாபா ராம்தேவ் கூறுகிறார்.

இயற்கை சாராத பொருட்களை உற்பத்தி செய்யும் பிராண்டுகளை விட இயற்கை சார்ந்த பிராண்டுகள் மூன்று மடங்கு வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன. நீல்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இயற்கை சார்ந்த பொருட்கள் உற்பத்தித் துறையில் இந்திய நிறுவனங்கள் மட்டும் 81 விழுக்காட்டுப் பங்கைக் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களால், இயற்கை சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் இந்திய நிறுவனங்களின் பிராண்டு விரிவாக்கத்துக்கு நிகராகச் செயல்பட முடியவில்லை.

எடுத்துக்காட்டாக, கோல்கேட் பால்மோலிவ் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் பற்பசை போன்ற வாய்வழி பராமரிப்பு பொருட்கள் உற்பத்தித் துறையில் பெரும்பாலான பங்கைக் கொண்டுள்ளது. ஆனாலும், இந்த நிறுவனம் இந்திய இயற்கை சார்ந்த நிறுவனங்களின் போட்டியில் தோல்வியுற்றுவிட்டது. ஆகையால், தனது வெற்றிக்காலத்தை மீட்டெடுத்து, நுகர்வோரை மீண்டும் கையகப்படுத்தும் நோக்கில் கோல்கேட் ஸ்வர்ன வேத்சக்தி மற்றும் சிபக்கா வேத்சக்தி ஆகிய இயற்கை சார்ந்த பொருட்களை கோல்கேட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

2017ஆம் நிதியாண்டில் பற்பசைத் துறையில் 55.1 விழுக்காடாக இருந்த கோல்கேட் நிறுவனத்தின் பங்கு 2018ஆம் ஆண்டில் 53.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நுகர்பொருள் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் பிரபல ஃபேர் & லவ்லி பிராண்டின் மதிப்பு சுமார் ரூ.2,000 கோடியாகும். ஆனால், இந்த பிராண்டு தற்போது இயற்கை சர்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடனான போட்டியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

நீல்சன் நிறுவனத்தின் தகவலின்படி, இயற்கை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் முக்கிய இயற்கை பிராண்டுகள், இயற்கைப் பொருட்கள் சந்தையில் ஏறத்தாழ ஐந்தில் நான்கு பங்கைக் கொண்டுள்ளது. இந்த வேறுபாட்டுக்கு என்ன காரணம்? இது எதன் விளைவு? இயற்கைப் பொருட்கள் சந்தையில் இந்திய நிறுவனங்கள் அடைந்த வெற்றியைப் பன்னாட்டு பெரு நிறுவனங்களால் ஏன் அடைய முடியவில்லை? ஏராளமான பெரு நிறுவனங்கள் பல்லாண்டுகளாக இந்தியாவிலேயே இருந்து இந்திய நிறுவனங்களாகவே பெயரெடுத்து விட்டன. அப்படியிருக்கும் போதிலும் ஏன் அவர்களால் வெற்றியை நிலைநாட்ட முடியவில்லை? நிறுவனங்களின் பிரச்சினையா? கடந்த சில ஆண்டுகளாக அந்நிறுவனங்கள் அதீத நம்பிக்கையுடன் செயல்பட்டதன் பின்விளைவா? அல்லது அவர்களின் விளம்பரங்களுக்கும், கூற்றுகளுக்கும் நுகர்வோர் சோர்வடைந்து விட்டனரா?

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா சார்ந்து தயாரித்த புதுமையான பொருட்களுக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. அப்பொருட்கள் மக்களின் மனதையும் வென்றுள்ளன என்றே கூறலாம். மெக்டொனால்ட் இந்தியா நிறுவனத்தின் மெக் அலூ டிக்கி பர்கர், நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், இந்துஸ்தான் யூனிலீவரின் வீல் போன்றவை இதற்கு சில எடுத்துக்காட்டுகளாகும். எனினும், இந்தச் சந்தையில் பிராண்டுகளை மேன்மேலும் மேம்படுத்தக் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டிய தேவை உள்ளது. நுகர்வோரின் கருத்துகளுக்கு அந்நிறுவனங்கள் செவிசாய்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

உலகளவிலும் கூட நச்சுப் பொருட்கள் இல்லாத பொருட்களையும், இயற்கை சார்ந்த பொருட்களையுமே நுகர்வோர் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்தியாவிலோ நுகர்வோர் இன்னும் பிடிவாதமாக இருக்கின்றனர்.

நன்றி: மிண்ட்

தமிழில்: அ.விக்னேஷ்

முந்தைய கட்டுரை: கொந்தளிக்கும் வங்கி ஊழியர்கள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

ஞாயிறு, 9 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon