மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

சேலத்தில் சிவகார்த்தியின் நிலை என்ன?

சேலத்தில் சிவகார்த்தியின் நிலை என்ன?

சிவகார்த்தி மார்கெட்: கள நிலவரம் ஒரு அலசல் - 5

தமிழ் சினிமாவுக்கு அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிய சேலம் ஏரியா, என்றுமே சினிமாவுக்கு பாதகம் செய்தது இல்லை என்று கூறலாம்.

கணக்கு காட்டப்படும் தொகை குறைவு என்றாலும், படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பார்கள். காரணம் தமிழகத்தில் குறைவான விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவது சேலம் ஏரியாவில் தான். அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தைக் காட்டிலும் அதிகமாக விற்க முடியாது என தியேட்டர் நிர்வாகம் பிடிவாதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஏரியாவில், வேலைக்காரன் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கே சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் வியாபாரம் செய்யப்பட்டிருக்கிறது.

சீமராஜா படப்பிடிப்பு தொடங்கும் முன் வேலைக்காரன் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், சீமராஜா படத்தின் ஏரியா விலை நிர்ணயிக்கப்பட்டு, அதில் குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்ட பிறகே பாக்கி தொகையை ஒரே நேரத்தில் மொத்தமாக வாங்கியுள்ளது 24 AM ஸ்டுடியோ. இதனடிப்படையில் சேலம் ஏரியாவில் சீமராஜா விலை ரூ. 4.5 கோடி.

முதல் ஐந்து நாட்களில் போட்ட முதலீட்டை எடுக்கும் முயற்சியில் திரையரங்குகள் இறங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடைபெற்றால், சுமார் 6 கோடி ரூபாய் மொத்த வசூல் கிடைத்து அதனை திரையரங்குகள் நேர்மையாக கணக்குக் காட்டினால் அசல் திரும்ப கிடைக்கும். சேலம் ஏரியாவில் திரையரங்குகள் கட்டுப்பாட்டில் சினிமா இருப்பதால், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இவற்றைக் கடந்து சேலத்தில் சீமராஜா சேலத்தில் ஜெயிக்க வேண்டும்.

சிவகார்த்தி மார்கெட்: கள நிலவரம் என்ன?

மதுரையில் பறக்குமா சீமராஜா கொடி?

நெல்லையில் நிலைகொள்ளுமா சீமராஜா?

திருச்சி திருப்பத்தை தருமா?

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon