மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

பிரச்சினை ஏற்படுத்தும் காதல்கள்!

 பிரச்சினை ஏற்படுத்தும் காதல்கள்!

விளம்பரம்

காதல் என்பது எதுவரை என்ற கேள்விக்கு, இந்த உலகில் வாழ்ந்த அறிஞர்களால் கூட விளக்கம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், காதலை இதயப்பூர்வமாக எதிர்கொள்வதைவிட, மூளையின் வழியாக நோக்குவதே சிறந்ததாக அமையும். உணர்வுகளுக்குள் சிக்கிக்கொள்ளும் காதல், உண்மையை விட்டு வெகுதூரம் விலகி நிற்கும். இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் காதல் பற்றிய எதிர்பார்ப்பு மிகையானதாக இல்லை. இது ஆறுதலான விஷயம் தான். ஆனாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட காதல்களைக் கடந்து வந்தவர்களையே, இப்போதைய உலகம் முழு மனிதர்களாக ஏற்றுக்கொள்கிறது. அப்படியெல்லாம் இல்லையே என்று சொல்பவர்களும் கூட, தாங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது காதல் வயப்பட்டதை மறைக்க முயல்வதே வழக்கமாக இருந்து வருகிறது.

குறிப்பாக, பள்ளி, கல்லூரி, பணியிடம், திருமணம், திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை என்று பல்வேறு காலகட்டங்களில் ஒரு மனிதர் மனதில் காதல் மலர வாய்ப்புள்ளது. ஆனால், இந்த படிநிலைகள் அனைத்திலும் கண்டிப்பாக ஒரு காதல் இருந்தாக வேண்டுமென்ற சூழல் இன்று உருவாகியுள்ளது. அல்லது அவ்வாறு விரும்பும் மனிதர்கள் பெருகியுள்ளனர் என்று கருதலாம்.

காதலுக்கான வரையறையை, ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகமே தீர்மானிக்கிறது. இதனாலேயே, நிகழ்காலத்திலும் காதலால் பல பிரச்சினைகள் உண்டாகின்றன. பல கொலைகளும் தற்கொலைகளும் குழு வன்முறைகளும் நிகழ்கின்றன. சமூகம் காதலை எதிர்கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை விட, சம்பந்தப்பட்ட இரண்டு இதயங்கள் அதனை அணுகும் முறைகளால் ஏற்படும் பிரச்சினைகளே மிக அதிகம். காதல் திருமணத்துக்குப் பிறகும் நீதிமன்ற வாசலில் பிரிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனிதர்களே இதற்கு சாட்சி.

காதல் முறிவு தரும் வலி, கடுமையான மனநல பாதிப்பை உண்டாக்குகிறது. தக்க ஆலோசனைகளும் வழிமுறைகளும் இல்லாமல் இதனைக் கடந்து வர இயலாது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு இருக்கும் ஆகப்பெரிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இதனைத் தவிர்க்க, உரிய மனநல மருத்துவரை நாடுவது அவசியம். மைண்ட் ஸோன் மருத்துவமனையில் தரப்படும் சிகிச்சைகள், இதுபோன்ற பிரச்சினைகளால் இறுகிய மனதை இலகுவாக்குகிறது; பாதிப்பிலிருந்து சம்பந்தப்பட்டவர்களை மீட்டெடுக்கிறது. இதனை மருத்துவ உளவியல் நிபுணர் சுனில் குமார் மற்றும் உளவியல் மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

மைண்ட் ஸோன் மருத்துவமனை
நம்பர் 58/2, முதல் அவென்யூ,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை – 600020
இமெயில்: [email protected]
அலைபேசி: 044-24460101, 9444297058, 9176055660

விளம்பர பகுதி

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon