மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

பிஸியான விமான நிலையங்களில் டெல்லி!

பிஸியான விமான நிலையங்களில் டெல்லி!

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் 16ஆவது விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் திகழ்கிறது.

இதுகுறித்து சர்வதேச விமான கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2017ஆம் ஆண்டில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 6.34 கோடி பயணிகளைக் கையாண்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் சர்வதேச அளவுடன் ஒப்பிடுகையில் 14 விழுக்காடு பயணிகளை இந்திரா காந்தி விமான நிலையம் கையாண்டுள்ளது. இதன்மூலம் உலகின் பரபரப்பான 20 விமான நிலையங்களில் ஒன்றாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உருவெடுத்துள்ளது. பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் 2017ஆம் ஆண்டில் ஆறு இடங்கள் முன்னேற்றம் கண்டு 16ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் 22ஆவது இடத்தைப் பெற்றிருந்தது.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா ஹர்ட்ஸ்பீல்டு ஜாக்சன் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் 10.39 கோடி பயணிகளை 2017ஆம் ஆண்டில் கையாண்டுள்ளது. 9.58 கோடி பயணிகளை கையாண்ட சீனாவின் பெய்ஜிங் விமான நிலையம் இரண்டாவது இடத்தையும், 8.82 கோடி பயணிகளைக் கையாண்டுள்ள துபாய் சர்வதேச விமான நிலையம் 3ஆவது இடத்தையும், 8.54 கோடி பயணிகளைக் கையாண்ட டோக்கியோ விமான நிலையம் 4ஆவது இடத்தையும், 8.45 கோடி பயணிகளைக் கையாண்ட லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

திங்கள், 24 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon