மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

பொருளாதார வளர்ச்சி: நம்பிக்கை தளராத ஜேட்லி

பொருளாதார வளர்ச்சி: நம்பிக்கை தளராத ஜேட்லி

அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என்று மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரியான அமிதாப் காந்தால் தொகுக்கப்பட்ட ‘தி பாத் அஹெட்’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி டெல்லியில் செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அருண் ஜேட்லி கலந்து கொண்டு பேசுகையில், “நாம் (இந்தியா) இப்போது எந்த நிலையில் நின்றுகொண்டிருக்கிறோம் என்று பார்த்தால், உலகிலேயே 7 முதல் 8 சதவிகிதப் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள ஒரே ஒரு நாடு இந்தியாதான். அதேபோல, அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளிலும் நாம்தான் வளர்ச்சியில் மிகப்பெரிய நாடாக இருப்போம். இந்த வளர்ச்சியை நம்மால் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியும்.

வளர்ச்சியடைந்த உலக நாடுகளில் வளர்ச்சிக்கான பாதைகள் இந்தியாவை விடக் குறைவாகவே இருக்கின்றன. இந்தியாவின் மையப் பகுதி வழியாக நீங்கள் இரு கோடு வரைந்தால் அக்கோடு கான்பூர் நகரத்தைக் கடந்து செல்லும். இந்தியாவின் பெரும்பாலான வளர்ச்சி அதற்குத் தென்புறத்திலேயே இருப்பதைக் காணலாம். அக்கோட்டுக்கு கிழக்குப் புறத்தில் இருக்கும் பகுதிகளில் வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது. கிழக்கு மாநிலங்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் சுரங்கத் தொழிலையே சார்ந்துள்ளன. அங்கு தொழில் துறையையும் உள்கட்டுமான வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமானது. சமையல் அறையிலிருந்து வெளியேறி தொழில் துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon