மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

பூஜைப் பொருட்கள் விற்பனைக்குத் தடை!

பூஜைப் பொருட்கள் விற்பனைக்குத் தடை!

அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்களில் பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனைக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது தமிழக இந்து சமய அறநிலையத் துறை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீர வசந்தராயர் மண்டபம் அதிகமாகச் சேதம் அடைந்தது.

இதனால் சில கோயில்களில் தீபம் ஏற்றத் தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கோயில்களின் உள்ளே இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் எனத் தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

ஆனால், அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில் வளாகத்தில் பூ, மாலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யலாம் என்றும், அதற்குத் தடை கிடையாது என்றும் சுற்றறிக்கை அனுப்பியது இந்து சமய அறநிலையத் துறை. .

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், நேற்று (செப்டம்பர் 26) இந்து சமய அறநிலையத் துறை புதிய பதில் மனுவொன்றை அளித்துள்ளது.

“இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்களில் பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனைக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில் வளாகத்தில் பூ, மாலை உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனை செய்யலாம் என்று கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று வெளியிட்ட சுற்றறிக்கையை வாபஸ் பெறுகிறோம்” என்று பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon