மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 17 ஜன 2021

சர்காரில் ஒரு ‘மெர்சல்’ கனெக்‌ஷன்!

சர்காரில் ஒரு ‘மெர்சல்’ கனெக்‌ஷன்!

விஜய் நடித்துவரும் சர்கார் படத்தில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தில் பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் இப்படத்திலிருந்து ‘சிம்டாங்காரன்’ என்னும் சிங்கிள் ட்ராக் மட்டும் வெளியான நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடானது அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ உரிமையினை முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் தற்போது கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், இந்த ஆண்டின் சிறந்த ஆல்பங்களுள் ஒன்றான சர்காரை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

விஜய், ஏ.ஆர். ரஹ்மான், விவேக் கூட்டணியில் உருவான மெர்சல் பட ஆடியோ உரிமையை சோனி நிறுவனம்தான் வாங்கியிருந்தது. தற்போது அதே கூட்டணி இதிலும் தொடர்ந்திருக்கிறது. மேலும் மெர்சலைப் போலவே இந்தப்படமும் தீபாவளி வெளியீடாகவே திரையில் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon