மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

துப்பாக்கிச் சூடு: பணி ஆணை!

துப்பாக்கிச் சூடு:  பணி ஆணை!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 19 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை இன்று (செப்டம்பர் 27) வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்குத் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அவரவர் தகுதிக்கேற்ப அரசுப் பணியும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டின்போது உயிரிழந்தவர்களின் 10 வாரிசுதாரர்கள், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 5 நபர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் 4 வாரிசுதாரர்கள் என்று மொத்தம் 19 நபர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை ஆகியவற்றில் பணிபுரிந்திட, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon