மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

திமுக எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்!

திமுக எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்!

செங்கல்பட்டு திமுக எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வரலட்சுமி மதுசூதனன். இவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அந்தத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வெங்கடேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்து வந்தது. நேற்று (செப்டம்பர் 26) நடைபெற்ற விசாரணையின்போது, திமுக எம்.எல்.ஏ வரலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன், ‘‘மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்பதால் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும்’’ எனக் கோரினார்.

விசாரணையின் இறுதியில் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, திமுக எம்.எல்.ஏ. வரலட்சுமி வெற்றி பெற்றது செல்லும் எனத் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon