மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

உலகம் பிறந்தது எனக்காக!

உலகம் பிறந்தது எனக்காக!

தினப் பெட்டகம் – 10 (27.09.2018)

இன்று (செப்டம்பர் 27) உலகச் சுற்றுலா தினம் (World Tourism Day):

1. உலகச் சுற்றுலா தினம் என்பது, சுற்றுலா மற்றும் அதன் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகக் கொண்டாடப்படுகிறது.

2. கடந்த சில தசாப்தங்களில், சுற்றுலாத் துறை அதிக அளவில் வளர்ந்திருக்கிறது. தற்போது உலகில் நான்காவது பெரிய தொழில்துறை, சுற்றுலாத் துறை.

3. 1950ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 25 மில்லியன், 2015ஆம் ஆண்டில் 1.2 பில்லியன்.

4. உலகிலேயே சுற்றுலாப் பயணிகள் அதிகமாகச் செல்லும் இடம்: ஃபிரான்ஸ்.

5. சுற்றுலாப் பயணிகள் என்பதற்கான ஆங்கில வார்த்தையான “Tourist”, 1760ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.

6. அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடுகள்: அமெரிக்கா, சீனா, இத்தாலி, துருக்கி, ஜெர்மனி.

7. உலகிலுள்ள 10 நபர்களில் ஒருவருக்கான வேலைவாய்ப்பைச் சுற்றுலாத் துறை வழங்குகிறது.

8. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% சுற்றுலாத் துறையிலிருந்து கிடைக்கிறது.

9. 1950இல் சுற்றுலாத் துறை மூலம் கிடைத்த வருமானம் 2 பில்லியன் டாலர்கள்; 2015இல் 1260 ட்ரில்லியன்!

10. முதன்முதலாக, உலகச் சுற்றுலா தினம் 1980ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

- ஆஸிஃபா

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon