மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

சச்சினால் மீண்டும் இணைந்த ஜோடி!

சச்சினால் மீண்டும் இணைந்த ஜோடி!

நகுல், சுனைனா இணைந்து நடிக்கும் படத்தின் புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸின் சில ஆரம்பகாலப் படங்களான காதலில் விழுந்தேன் மற்றும் மாசிலாமணி ஆகியவற்றில் நடித்துக் கவனம்பெற்ற ஜோடி நகுல் - சுனைனா. இந்த ஜோடி தற்போது மூன்றாவது முறையாக இணைந்து ஒரு படத்தில் நடித்துவருகிறது. சச்சின் தேவ் இதை இயக்கிவருகிறார்.

நகுல் - சுனைனா ஜோடியின் முந்தைய திரைப்படங்களில் பாடல்கள் படு ஹிட். குறிப்பாக, காதலில் விழுந்தேனில் இடம்பெற நாக்க மூக்கா எனும் பாடல் எந்தளவு ஹிட் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த இரு படங்களுக்கும் விஜய் ஆண்டனி இசையமைத்திருந்த நிலையில் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். முருகானந்தம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ரியாஸ் மொஹமது எடிட்டிங் செய்கிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படத்துக்கு எரியும் கண்ணாடி எனப் பெயரிடப்பட்டுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு நகுலும் சுனைனாவும் இணைந்திருப்பதால் இந்தப் படம் ரசிகர்களிடத்தில் சிறப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon