மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

இந்தியாவின் தானிய உற்பத்தி எவ்வளவு?

இந்தியாவின் தானிய உற்பத்தி எவ்வளவு?

சென்ற காரிஃப் பருவத்தில் இந்தியா மொத்தம் 141.59 மில்லியன் டன் அளவிலான உணவு தானியங்களை உற்பத்தி செய்துள்ளது.

இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி குறித்த விவரங்களை மத்திய வேளாண் துறை அமைச்சரான ராதா மோகன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிட்டுள்ளார். அதில், 2017-18ஆம் ஆண்டின் ஜூலை - ஜூன் பருவத்தில் மொத்தம் 140.73 மில்லியன் டன் தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்ததாகவும், இந்த ஆண்டின் காரிஃப் பருவத்தில் 141.59 மில்லியன் டன்னாக உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது 2012 முதல் 2017 வரையிலான சராசரி காரிஃப் உற்பத்தி அளவான 129.65 மில்லியன் டன்னை விட 11.94 மில்லியன் டன் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரிஃப் பருவத்துக்கான முக்கியப் பயிர்களாக நெல், சோளம் மற்றும் சோயாபீன் ஆகியவை உள்ளன. காரிஃப் பயிர்களுக்கான அறுவடை பொதுவாக செப்டம்பர் மாத மத்தியில் தொடங்கும். இந்த ஆண்டின் காரிஃப் உற்பத்தியில், அரிசி உற்பத்தி 99.24 மில்லியன் டன்னாகவும், எண்ணெய் வித்துகள் உற்பத்தி 22.19 மில்லியன் டன்னாகவும், சோளம் உற்பத்தி 21.47 மில்லியன் டன்னாகவும், கரும்பு உற்பத்தி 383.89 மில்லியன் டன்னாகவும் உள்ளது. சென்ற ஆண்டில் அரிசி உற்பத்தி 97.5 மில்லியன் டன்னாகவும், எண்ணெய் வித்துகள் உற்பத்தி 20.99 மில்லியன் டன்னாகவும், கரும்பு உற்பத்தி 276.9 மில்லியன் டன்னாகவும் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon