மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

மதுரை இளைய ஆதீனம்: மீண்டும் நித்தியானந்தா

மதுரை இளைய ஆதீனம்: மீண்டும் நித்தியானந்தா

மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது ஆதீனமாக நித்தியானந்தா தொடரலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமனம் செய்தார் தற்போதைய குருமகா சன்னிதானமாக இருந்துவரும் அருணகிரிநாதர். அதன்பின், இருவருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து, நித்தியானந்தா நியமனத்தை ரத்து செய்வதாக அறிவித்தார் மதுரை ஆதீனத்தின் 292ஆவது ஆதீனமாக இருந்துவரும் அருணகிரிநாதர். இதனை எதிர்த்து, நித்தியானந்தா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன் முடிவில், மதுரை ஆதீனம் தொடர்பான உரிமை நித்தியானந்தாவுக்குக் கிடையாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, மதுரை ஆதீன உரிமை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, நேற்று (செப்டம்பர் 26) நடைபெற்றது. அப்போது, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி எம்.வி.முரளிதரன். மதுரை இளைய ஆதீனமாக நித்தியானந்தா பணியாற்றலாம் என்று அனுமதித்து உத்தரவிட்டார்.

மதுரை ஆதீனமானது 2,500 ஆண்டுகள் பழைமையானது என்று அதன் பக்தர்களால் போற்றப்படுகிறது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon