மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

நட்சத்திரத்தைத் தொட்டுக் காட்டிய மேகா

நட்சத்திரத்தைத் தொட்டுக் காட்டிய  மேகா

ரஜினி நடிக்கும் பேட்ட திரைப்படத்தின் படக்குழுவோடு மேகா ஆகாஷ் இணைந்துள்ளார்.

பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து கல்லூரி போன்ற அரங்கு அமைத்து சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன்பின் சென்னை, செங்குன்றத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்குச் சொந்தமான படப்பிடிப்புத் தளத்திலும் நடைபெற்றது. தற்போது படக்குழு உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ, வாரணாசி, சோன்பாத்ரா ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்திவருகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்றால் எப்போதும் எதிர்பார்ப்புக்குப் பஞ்சம் இருக்காது. இதில் ரஜினியோடு விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. விஜய் சேதுபதிக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது படக்குழுவுடன் மேகா ஆகாஷ் இணைந்துள்ளார். ரஜினியோடு நடிப்பது குறித்த தனது அனுபவத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேகா தனது பதிவில், “கனவு நனவானது. சில நேரங்களில் உங்களால் நட்சத்திரங்களைக்கூடத் தொடமுடியும்” என பதிவிட்டு ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

புதன், 26 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon