மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: பணக்காரர்களின் அரசு!

சிறப்புக் கட்டுரை: பணக்காரர்களின் அரசு!

அஜித் ரானடே

புத்தக விமர்சனம்: ‘தி பில்லியனர் ராஜ்’

இந்தியாவில் பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கடனாக வாங்கிவிட்டுத் தப்பிச்சென்று லண்டனில் தங்கியுள்ளார் விஜய் மல்லையா. அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஒருபக்கம் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதே சமயத்தில், அவர் நாட்டை விட்டுத் தப்பியோடியபோது அவரைப் பற்றி தேசிய அளவில் தேடுதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது. அவர் தப்பியோடிய அதே காலத்தில் கிரீன்பீஸ் செயற்பாட்டாளர் ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். வெளிநாட்டில் ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற அந்தச் செயற்பாட்டாளருக்குத் தேடுதல் நோட்டீஸ் வெளியிடப்பட்டதால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். பணக்காரர்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக வளைப்பதைத்தானே இது காட்டுகிறது! அல்லது, விஜய் மல்லையா 12 ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பதால் இத்தகைய சலுகைகளையும், சட்ட வளைவுகளையும் அனுபவித்தாரா?

சமமின்மையும் ஊழலும்

ஜேம்ஸ் கிராப்ட்ரீ எழுதியுள்ள தி பில்லியனர் ராஜ் புத்தகத்தில் விஜய் மல்லையாவுக்கென தனிப்பட்ட அத்தியாயம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தனியார் செல்வம் மற்றும் பொது வறுமை பற்றிய பார்வைகளை உள்ளடக்கிய, தற்கால வரலாறு குறித்த தெளிவான வரலாற்றுத் தொகுப்பு. இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான கிராப்ட்ரீ, தற்போது சிங்கப்பூரில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அதற்கு முன்பு அவர் ஃபினான்சியல் டைம்ஸ் இதழின் மும்பை கிளையின் தலைவராகப் பணிபுரிந்தர். அப்போது, ஐந்து ஆண்டுகள் இந்தியாவின் மூலை முடுக்குகளில் அவர் தனது நேரத்தைச் செலவிட்டார். அப்போது இந்தியாவின் தனியார் செல்வம் மற்றும் பொது வறுமை குறித்து ஆழமாகக் கவனித்து வந்தார். ஒரு சாந்தமான கல்வியறிவும், பத்திரிகையாளரின் கூர்ந்த பார்வையும் இரண்டறக் கலந்ததாக இந்தப் புத்தகம் உள்ளது.

இந்தியாவின் நவீன பொருளாதார மேம்பாடு தொடர்பான துணுக்குக் கதைகள் மிகச்சரியாக விவரிக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் இந்தப் புத்தகம் வெளியாகியிருந்தாலும், இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகள் குறித்த ஆழமான பார்வைகளை இந்தப் புத்தகம் வழங்குகிறது. சமமின்மை, ஊழல், கடன்கள் மிகுந்த வளர்ச்சிக் காலத்தில் தொழிற்துறை ஆகிய மூன்று விவகாரங்களில் கிராப்ட்ரீ கவனம் செலுத்துகிறார்.

1991ஆம் ஆண்டுக்குப் பிறகு, தாராளவாதத்தை இந்தியா பின்தொடரத் தொடங்கியதும் பொருளாதார வளர்ச்சியும் முன்னேறிச் சென்றது. அந்த வளர்ச்சியின் விளைவுகள், அளவுக்கு மீறி உச்சத்தைத் தொட்டன. பொருளாதார அடுக்கில் மேனிலையில் இருக்கும் 10 விழுக்காட்டினரின் ஊதியத்தின் பங்கு இப்போது 55 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. 2014ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியில் மேனிலையில் இருக்கும் ஒரு விழுக்காட்டினரின் பங்கு மட்டும் உச்சபட்சமாக இருந்துள்ளது.

1990ஆம் ஆண்டில் வெறும் இரண்டாக இருந்த பில்லியனர்களின் (100 கோடிக்கும் மேல் சொத்துடையவர்கள்) எண்ணிக்கை இப்போது 120க்கும் மேல் உயர்ந்துவிட்டது. ரஷ்யாவின் தன்னிலைக் குழுவினரின் திடீர் உயர்வைப் போலவே இவர்களின் உயர்வும் இருப்பதால், இவர்களை பாலிகார்ச்ஸ் என்ற புதிய வார்த்தையைப் புத்தக ஆசிரியர் உருவாக்கி அழைக்கிறார்.

இந்த பாலிகார்ச்ஸ்களில் விஜய் மல்லையாவும் ஒருவர். அரசியல் தொடர்புகள் மற்றும் குள்ள முதலாளித்துவப் பின்னணி கொண்ட தொழில்முனைவோர் வளர்ந்துகொண்டே வந்தனர். அவர்களுடன் ஊழலும் வளர்ந்துகொண்டே போனது. இதனால் அவர்களுக்குப் பொதுத் துறை வங்கிகளிடமிருந்து எளிதில் கடன் கிடைத்தது. சாமர்த்தியமான தொழிலதிபர்கள் எளிதில் வளைந்துகொடுக்கும் வங்கி அதிகாரிகளைக் கண்டுபிடித்தனர். அதனால் அவர்களின் கடன் விண்ணப்பங்களுக்கு எளிதில் ஒப்புதல் கிடைத்தது. இந்தப் போக்கால் கடன்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துவிட்டது. அதனால்தான் இப்போது மலையளவுக்கு வாராக்கடன்கள் உள்ளன. இதைத்தான் முட்டாள்தனமான முதலாளித்துவம் என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அழைக்கிறார்.

அரசின் குறை என்ன?

பேராசைப் பிடித்த தொழிலதிபர்களைப் பிடிப்பதில் அரசின் திறன் குறைபாடுதான் என்ன? அல்லது அரசின் திறமையின்மையால் ஊழல் பலமடங்கு பெருகிவிட்டதா? அல்லது, அரசியல் அறிவியலாளரான சாமுவேல் ஹண்டிங்டன் கூறியதுபோல ஊழல் என்பது வெறும் பின்விளைவு மட்டுமல்லாமல் நவீனமயமாகலுக்குத் தேவையான பொருளா? 2008ஆம் ஆண்டில் ‘தி திரெட் ஆஃப் ஆலிகார்சி’ என்ற தலைப்பில் இந்தியத் தொழில் துறையில் யார் யார், எப்படி என்பது குறித்த தனது பார்வையை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் வழங்கினார்.

பணத்துக்கு விலைபோகும் அரசியல்வாதிகள், பெருந்திரளான ஏழை வாக்காளர்கள், ஊழல் தன்னலவாதிகள் ஆகியோருக்கு இடையே சுயமாகத் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் அமைப்பு ஒன்று இருப்பதாக ரகுராம் ராஜன் கூறினார். அரசியல்வாதிக்கு வாக்குகளுக்காக ஏழை மக்கள் தேவை. கேவலமான அரசு சேவைகளில் தங்களது தேவைகள் பூர்த்தியாக வேண்டுமென்றால் அரசியல்வாதியின் ஆதரவு ஏழைகளுக்கு வேண்டும். கட்சிக்கும், தேர்தல் பிரச்சாரங்களுக்கும் நிதியுதவி வழங்குவதற்காக அரசியல்வாதிக்குத் தொழிலதிபர்கள் தேவை. அதற்குக் கைம்மாறாக தொழிலதிபர்களுக்கு நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்கிறது.

ஒவ்வொரு ஒரு லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், அதிக எண்ணிக்கையில் பில்லியனர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக ரகுராம் ராஜன் குறிப்பிடுகிறார். இதிலிருந்து வெளியேறுவதற்கு ஒரே வழி, ஊழல் சங்கிலி அமைப்பை உடைப்பதுதான் என்று ராஜன் கூறுகிறார். 19ஆவது நூற்றாண்டில் அமெரிக்காவின் பொற்காலம் குறித்து ரகுராம் ராஜன் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார். இதுகுறித்து கிராப்ட்ரீயின் புத்தகத்திலும் துணைத் தலைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. பொற்காலம் (Gilded Age) என்ற வார்த்தையைப் பிரபல எழுத்தாளரான மார்க் ட்வைன் உருவாக்கினார்.

கார்னெகிக்கள், ராக்ஃபெல்லர்கள், வண்டேர்பிளிட்டுகளின் பெருஞ்செல்வத்தின் பின்னணியில் இருக்கும் அருவருக்கத்தக்க ஊழலைக் குறிப்பிடுவதற்காக இந்த வார்த்தையை உருவாக்கினார். இந்தியாவும் பொற்கால சூழலைப் போன்ற நிலையைச் சந்தித்து வருவதாக ஃபினான்சியல் டைம்ஸ் இதழின் கருத்து தலையங்கத்தில் முன்னாள் முதலீட்டு வங்கியாளரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜெயந்த் சின்ஹாவும், இடதுசாரி கருத்தியல் கொண்ட பேராசிரியர் அசுட்டோஷ் வர்ஷ்னீயும் எழுதியிருந்தனர். இந்தியாவில் ஊழலுக்கு எதிரான இயக்கம் உச்சபட்சத்தில் இருந்தபோது இந்தக் கருத்துகளை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

இதில் ஒரு மிகப்பெரிய வேறுபாடும் உள்ளது. அமெரிக்காவில் கொள்ளைக்கார தொழிலதிபர்களின் முதலாளித்துவம் செழிப்பாக இருந்தபோது குறைந்தபட்ச ஜனநாயகக் கட்டுப்பாடுகளே இருந்தன (பெண்கள் மற்றும் கறுப்பினத்தவர்களின் வாக்குரிமை எதிர்காலத்தில் ஏற்பட்டவை). மேலும், இணையம், சமூக ஊடகங்கள், தகவல் உரிமை போன்றவை அக்காலத்தில் இல்லை. இந்தியாவிலோ ஜனநாயகம் விரிவடைந்து, சுதந்திர ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இருக்கும் காலத்தில் பொற்கால சூழல் செழித்தோங்குகிறது. இந்தப் பிரச்சினை மிகவும் அபாயமானது.

எதிர்காலம் என்ன?

கிராப்ட்ரீ மிகவும் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். அவரது நம்பிக்கை இந்தப் புத்தகம் முழுவதுமே வெளிப்படுகிறது. அமெரிக்காவில் பொற்காலத்துக்குப் பிறகு முற்போக்குக் காலம் உருவாகி, சமத்துவத்துக்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டது போலவே, இந்தியாவிலும் நியாயமான, ஊழல் குறைந்த எதிர்காலம் ஏற்படும் என்று கிராப்ட்ரீ யூகிக்கிறார்.

இதுபோன்ற ஒரு புத்தகத்தை எழுதுவது மிகவும் சவாலான பணி. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, செய்தித்தாள்களை விரிக்கும்போது அவற்றின் கட்டுரைகள் இப்புத்தகத்துக்குள் சிந்தியது போல உள்ளது. இந்தப் புத்தகத்தின் சொற்றாடலில் தற்கால நிகழ்வுகள் ஏராளமாகக் குவிந்திருக்கின்றன. மல்லையாவை இந்தியாவுக்குள் கொண்டுவருவது நிச்சயமற்றதாக இருப்பதைப் போலவே, இந்தியாவின் முற்போக்கு யுகமும் நிச்சயமற்றதாக உள்ளது. சொல்லப்போனால், இந்தப் புத்தகத்தின் அடுத்த பாகத்துக்காகக் கூட நாம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். கிராப்ட்ரீ சிங்கப்பூரில் வசித்து வருகிறார். ”சிங்கப்பூர்தான் இந்தியாவின் சிறந்த நகரம்” என்று கிராப்ட்ரீ கூறுகிறார்.

நன்றி: தி இந்து

தமிழில்: அ.விக்னேஷ்

நேற்றைய கட்டுரை: பொருளாதாரம் மீது நம்பிக்கையற்ற இந்தியர்கள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

புதன், 26 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon