மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு!

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு!

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா என்பது இன்று பிற்பகலில் தெரியவரும்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக, 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்தது. இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜூலை 20ஆம் தேதியன்று இதன் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று (செப்டம்பர் 27) பிற்பகல் 2 மணிக்கு மேல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றப்படுமா என்பது இந்தத் தீர்ப்பில் தெரியவரும்.

புதன், 26 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon