மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

தன்னைத்தானே கைப்பற்றிய யுவன்

தன்னைத்தானே கைப்பற்றிய யுவன்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஆடியோ உரிமையை யுவனின் ‘யு1’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

2010ஆம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் திரைப்படம் தனித்துவமான பட உருவாக்கம், பின்னணி இசை, கதை சொல்லல் முறையால் பெரிதும் பேசப்பட்டது. அதன் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு உருவாகியது. சூப்பர் டீலக்ஸ் என்ற பெயரில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் நடிப்பதால் இந்தப் படம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் பாகத்தில் யுவனின் பின்னணி இசை அவருக்குத் தேசிய விருதைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்பட்டது. யுவனின் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது. தற்போது யுவன் சூப்பர் டீலக்ஸ் படத்துக்குப் பின்னணி இசையமைத்து வருகிறார். தனது ஸ்டூடியோவில் இசை சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளதை வீடியோவாகப் பதிவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தில் தியாகராஜன் குமாரராஜாவோடு இணைந்து நலன் குமாரசாமி, மிஷ்கின், நீலன் ஷங்கர் ஆகியோர் துணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். டைலர் சடன் & கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன.

புதன், 26 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon