மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

ஆபரேஷன் தாமரை குறித்து கவலையில்லை: குமாரசாமி

ஆபரேஷன் தாமரை குறித்து கவலையில்லை: குமாரசாமி

கர்நாடகாவில் அரசில் நிச்சயமற்ற சூழ்நிலை இல்லை என்று தெரிவித்த அம்மாநில முதல்வர் குமாரசாமி, “பாஜகவின் தாமரை ஆபரேஷன் குறித்து கவலை இல்லை” என்றும் தெரிவித்தார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தன. குமாரசாமி முதல்வராகப் பதவியேற்றார். இந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி தனி விமானம் மூலம் இன்று (செப்டம்பர் 27) காலை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அவருடன் அவரது மனைவி அனிதா, மகன் நிகில் ஆகியோர் உடன் வந்திருந்தனர். அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி மற்றும் தூத்துக்குடி துணை ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் வரவேற்றனர். காவல்துறை சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, “கர்நாடகாவில் அரசியலில் நிச்சயமற்ற சூழ்நிலை என்பது இல்லை. எனது தலைமையிலான அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். கர்நாடகாவில், பாஜகவின் தாமரை ஆபரேஷன் குறித்து கவலை இல்லை. 18 எம்.எல்.ஏக்கள் மாற்றுக் கட்சிக்குச் செல்வதாக கூறப்படும் தகவல்கள் தவறானது.” என்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூருக்குச் சென்றார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon