மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

இந்திய மருத்துவக் கவுன்சில் கலைப்பு!

இந்திய மருத்துவக்  கவுன்சில் கலைப்பு!

இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 7 பேர் கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதற்காக அவசரச்சட்டம் ஒன்று நேற்று(செப்-26) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும் மருத்துவக் கல்வியின் நிர்வாகத்தை சீர்படுத்துவதற்கும் இதுவரை இருந்த மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு 7 பேர் கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதாக இதற்காக மத்திய அரசின் சுகாதாரத்துறையால் பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டம் தெரிவித்துள்ளது.

புதிதாக அமைக்கப்படவுள்ள தேசிய மருத்துவ ஆணையம் நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர்.வி.கே.பாலினால் தலைமை தாங்கப்படும்.

இது தொடர்பாக, மருத்துவக் கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மருத்துவ ஆணையத்தில் எய்ம்ஸின் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலெரியா ,சண்டிகரிலுள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஜகத் ராம் உள்ளிட்டு 7 பேர் கொண்ட நிபுணர்கள் கொண்ட ஆளுநர் குழு ஒன்று அமைக்கப்படுகிறது. புதிய. ஆணையத்திற்கான சட்ட முன்வரைவு அமலாக்கப்படும் வரை ஆளுநர் குழு செயல்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon