மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

பிரதமருக்கு ஐ.நா. விருது!

பிரதமருக்கு ஐ.நா. விருது!

பிரதமர் மோடிக்கு ஐ.நா.வின் சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் பங்காற்றியவர்களுக்கு சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் என்னும் விருதை ஐ.நா. சபை வழங்கி வருகிறது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் தொடர்பாக சிறப்பாக செயல்பட்டதாக இந்த ஆண்டு இவ்விருதுக்கு இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் உட்பட 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். துணிச்சலான, புதுமையான முயற்சிகள் மூலம் சுற்றுச்சூழல் பிரச்னைகளை தடுக்க நடவடிக்கை எடுத்தமைக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக ஐ.நா நேற்று(செப்டம்பர் 26) தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது, சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழிநடத்துவது போன்றவற்றிற்காக பிரதமர் மோடிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாவலர் மற்றும் உள்நாட்டு உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் ஜோன் கார்லிங் என்ற பெண்மணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், உலகிலேயே முதல் முறையாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, முற்றிலும் சூரியமின்சக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்துக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் 73ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் நடைபெறும் சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் நிகழ்ச்சியின்போது இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறப்பாக செயல்பட்ட 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட 7 பேருக்கு அன்றைய தினம் ‘யங்க் சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருதும் வழங்கப்படவுள்ளது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon