மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

அரசிடம் உதவி கோரும் பஞ்சாப் வங்கி!

அரசிடம் உதவி கோரும் பஞ்சாப் வங்கி!

ரூ.5,431 கோடி மூலதன உதவியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பஞ்சாப் நேஷனல் பேங்க் கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுத் துறை வங்கிகளின் நிதிநிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சமீபத்தில் (செப்டம்பர் 24) பங்கேற்றிருந்தார். அக்கூட்டத்தில் வங்கிகளுக்கு அரசு தரப்பிலிருந்து அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து தங்களுக்கு மூலதன உதவி வேண்டும் என்று இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வாராக் கடன் பிரச்சினைகளால் பெரும் நெருக்கடியில் உள்ள இவ்வங்கி சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி செய்த நிதி மோசடியால் கடும் இழப்புகளைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் அரசிடம் இந்த மூலதன உதவியைப் பெறுவது தொடர்பான பஞ்சாப் வங்கியின் இயக்குநர்கள் கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்குதாரர்களிடம் இதற்கான ஒப்புதல் பெறப்படுகிறது. சென்ற ஆண்டின் அக்டோபர் மாதத்திலேயே அரசு தரப்பிலிருந்து பொதுத் துறை வங்கிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2.11 லட்சம் கோடி மூலதன உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி முதற்கட்டமாக ரூ.11,336 கோடியை ஜூலை மாதத்தில் அரசு வெளியிட்டது. பஞ்சாப் நேஷனல் பேங்க், ஆந்திரா பேங்க் உள்ளிட்ட ஐந்து வங்கிகளுக்கு இந்த மூலதன உதவி அறிவிக்கப்பட்டது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon