மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

காதலர்களைக் குறிவைத்த டைட்டானிக்!

காதலர்களைக் குறிவைத்த டைட்டானிக்!

டைட்டானிக் திரைப்படத்தின் வீடியோ பாடல் ஒன்று நேற்று (செப்டம்பர் 26) வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

கலையரசன், கயல் ஆனந்தி, அஸ்னா சாவேரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் படம் டைட்டானிக். அறிமுக இயக்குநர் எம். ஜானகிராமன் இயக்கும் இந்தப்படத்தில் இயக்குநர் பாலாஜி மோகன், காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிக்கிறது. தெகிடி உள்ளிட்ட படங்களில் இசையமைத்ததன் வாயிலாகக் கவனம் பெற்ற இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதில் நடிகர் சிம்பு ஒரு பாடலைப் பாடியுள்ளார். குத்துப் பாடலாக அமைந்துள்ள அப்பாடல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இப்படத்திலிருந்து தற்போது ‘காலமும் கெட்டுப் போச்சு’ என்னும் பாடல் ஒன்று வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது.

மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப்பாடலை நிவாஸ் கே பிரசன்னாவே பாடியுள்ளார். அரோல் கொரோலி வயலின் இசைத்துள்ளார். தற்கால காதல், குடும்ப உறவுகள், காதலர்களுக்கு ஏற்படும் இடையூறுகள், காதல் என்னும் பெயரில் நிகழும் அபத்தங்கள் போன்றவற்றை விவரிப்பதாக அமைந்துள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon