மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

சுங்க வரி உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

சுங்க வரி உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

19 பொருட்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஏசி, ஃபிரிட்ஜ், காலணிகள் உட்பட 19 பொருட்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால் உள்நாட்டு உற்பத்தியில் உத்வேகம் ஏற்படும் என்று ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவரான ஜி.கே.குப்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ரூபாய் மதிப்பு சரிந்து வரும் சூழலில் சுங்க வரி உயர்வால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இருமடங்கு பாதுகாப்பு உயரும். மேலும் இறக்குமதியுடன் உள்நாட்டு நிறுவனங்களால் போட்டியிட முடியும். உள்நாட்டு உற்பத்திக்கும் இந்த வரி உயர்வு உத்வேகம் கொடுக்கும்” என்று கூறினார்.

எனினும், விமான எரிபொருளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் பயணிகள் போக்குவரத்துக் கட்டணம் உயரும் என்ற சிக்கல் எழுந்துள்ளது. காலணி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் ஃபரிதா குழுமத்தின் தலைவரான ரஃபீக் அகமது பேசுகையில், “சுங்க வரியை உயர்த்துவதற்கான தீர்மானத்தால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைவர். பல சீன காலணிகள் இந்தியாவுக்குள் வருகின்றன. ரூபாய் மதிப்பு சரிவும், சுங்க வரி உயர்வும் இறக்குமதியாளர்களுக்கு தற்போது ஒரு தடையாக இருக்கும். இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உற்சாகமடைவர்” என்று கூறினார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon