மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

மீண்டும் கலக்க வரும் பிரபுதேவாவின் ‘ஊர்வசி’!

மீண்டும் கலக்க வரும் பிரபுதேவாவின் ‘ஊர்வசி’!

காதலனில் பிரபுதேவா நடனமாடிய ஊர்வசி பாடலுக்குத் தற்போது நடனமாடவுள்ளார் ஷாகித் கபூர்.

பிரபுதேவாவின் டான்ஸ் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது காதலன் படத்தில் வரும் ஊர்வசி ஊர்வசி பாடல். அவரது நடனத் திறமையாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையாலும் பெருவாரியான ரசிகர்களைக் கவர்ந்த அந்தப் பாடலை முணுமுணுக்காத பிரபுதேவா ரசிகர்களே கிடையாது எனலாம். அந்தளவுக்கு கவனம் பெற்ற அந்தப்பாடல் தற்போது மீண்டும் புதிதாக வலம்வரவுள்ளது. ஆனால் படத்தில் அல்ல, மியூஸிக் வீடியோ வடிவில். தொடர்ச்சியாக மியூஸிக் வீடியோக்களில் நடித்துவரும் ஷாகித் கபூர்தான் இதில் இடம்பெறவுள்ளார். இவருடன் இணைந்து கியாரா அத்வானியும் வலம்வரவுள்ளார்.

யோ யோ ஹனி சிங் இசையமைக்கும் இந்த பாடலில் மற்ற வரிகள் மாற்றப்பட்டாலும் துவக்க வரியான ஊர்வசி மாற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த மியூஸிக் வீடியோ விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இது குறித்து சிறிய முன்னோட்டத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஷாகித். அந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon