மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

தவறான உறவு: இபிகோ சட்டப் பிரிவு 497 ரத்து!

தவறான உறவு: இபிகோ சட்டப் பிரிவு 497 ரத்து!

பிறர் மனைவியுடன் தவறான உறவு கொண்டிருப்பதைக் குற்றமென அறிவிக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி அதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று (செப்-27) தீர்ப்பு வழங்கியுள்ளது.

சட்டப் பிரிவு 497ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரித் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த விசாரணையானது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அரசியல் அமர்வின் முன்பாக நடந்துவருகிறது. இவ்விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பில், நீதிபதிகள்கூறுகையில், திருமணமான பெண்ணுடன் மற்றொரு ஆண் பரஸ்பர சம்மதத்துடன் தவறான உறவு கொள்வதை குற்றமெனக் கருதி அந்த குற்றத்தில் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்குவது அரசியல் சட்டத்திலுள்ள பாலினச் சமத்துவத்திற்கு எதிரானதாகும். இதில் மேலோட்டமாகப் பார்க்கும்போது ஆணுக்கு தண்டனை வழங்குவதும் அதில் ஈடுபட்ட பெண் மீது எந்த வழக்கும் தொடரமலிருப்பதும் பெண்ணுக்குச் சலுகை வழங்குவது போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில் திருமணமானக் பெண்ணை கணவர் தனது சொத்தாகவும் உடமைப் பொருளாகவும் பாவிப்பதாகவே இந்த சட்டப் பிரிவு கருதுகிறது. திருமணமான பெண் கணவரின் அடிமையல்ல என்று தெரிவித்துள்ளனர்.

மேலும்,தவறான உறவில் ஈடுபடுபவர்களுக்குத் தீர்வாக விவாகாரத்து இருக்கும்போது அதைக் குற்றமாக பாவிப்பது சரியானதல்ல. எனவே அரசியல் சட்டத்திலுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ள இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497ஐ ரத்து செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon