மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

கேரளா: செப்.30 வரை பெருமழை!

கேரளா: செப்.30 வரை பெருமழை!

கேரளாவில் வருகிற 30ஆம் தேதி வரை பெருமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக, நேற்று (செப்டம்பர் 26) எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இந்திய வானிலை மையம் வெளியிட்ட கணிப்பின்படி, செப்டம்பர் 25, 26ஆம் தேதிகளில் பெருமழை பெய்ய வாய்ப்பு இருந்ததையொட்டி கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. தற்போது, செப்டம்பர் 30ஆம் தேதி வரை பெருமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்று (செப்டம்பர் 27) பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை, இந்த மஞ்சள் எச்சரிக்கை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அதனால், பேரிடர் மேலாண்மைக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் தேவையான வசதிகளைச் செய்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையினால், 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதனால் 20,000 கோடி அளவில் இழப்பீடு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon